சனி வக்ர பெயர்ச்சி 2023, வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் நீதியின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நாம் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். அதனால்தான் சனி மிகவும் முக்கியமானது. நவகிரகங்களில் சனி மிக மெதுவாக நகரும் கிரகம். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். இதன் காரணமாக சில ராசிகளில் அனுகூலமான மற்றும் பாதகமான பலன்கள் ஏற்படும். யாருடைய ஜாதகத்தில் சனி பகவான் வலுவாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொடுத்து அவர்களை ஆசீர்வதிப்பார்கள். தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி நவம்பர் 4ஆம் தேதி மதியம் 12.45 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். இந்த நேரத்தில் சில ராசிக்காரர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த நேரத்தில் சில ராசிக்காரர்கள் சனிபகவானின் அருளால் வருமான அடிப்படையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.