ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்!

First Published | Aug 22, 2023, 1:46 PM IST

ராகு மற்றும் கேதுவின் சஞ்சாரம் அனைத்து 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும்.

ராகு கேது பெயர்ச்சி

ஜோதிடத்தின் படி நிழல் கிரகங்களான ராகு-கேது ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 30, 2023 ராகு-கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி அக்டோபர் 30-ம் தேதி ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். ராகு கேதுவின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும், சில ராசிகளுக்கு சோதனைகளையும் தரும். ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.

கிரகங்களின் தாக்கம்:

ராகு மற்றும் கேதுவின் அசுப பலன்களைப் பற்றி பலர் கவலைப்படுகிறார்கள், ஆனால் ராகு-கேது அசுப பலன்களை மட்டும் தருவதில்லை. அவை சுப பலன்களையும் தருகின்றன. ராகு மற்றும் கேதுவின் சஞ்சாரம் அனைத்து 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரை ராகு கேது பெயர்ச்சி பலன் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Tap to resize

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் பேச்சில் பணிவு இருந்தால் நன்மை தரும். வியாபாரத்திற்கு நல்ல நேரமாக இருக்கும். உங்கள் வேலை அல்லது இருப்பிடத்தில் மாற்றம் ஏற்படலாம். சில நேரங்களில் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ரிஷபம்:

கோபம் மற்றும் ஆக்ரோஷத்தை தவிர்க்கவும். வியாபாரம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரம் பெருகும். லாபகரமான பயணம் அமையும்.

கடகம்:

வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கலை மற்றும் இசையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் இருக்கலாம். மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:

உங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மனநலம் குறிப்பாக மோசமாக இருக்கும். எனினும் எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வரும். மத சடங்குகளைச் செய்வீர்கள். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி:

முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் முடியும். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

துலாம்:

உங்கள் நம்பிக்கை நிறைவேறும். இதனால் மனதின் அமைதியின்மையை யாராலும் உணர முடியாது. தொழில்-பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

விருச்சிகம்:

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். பொறுமையுடன் வேலை செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். கோபம் மற்றும் சர்ச்சையைத் தவிர்க்கவும். கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தனுசு:

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தால் நன்மைகள் கிடைக்கும். லாபம் காணலாம். தொழில் ஈடுபாடு அதிகரிக்கும். கடின உழைப்பு அதிகம் இருக்கும். பண வரவு அதிகரிக்கும்

மகரம்:

தன்னம்பிக்கையுடன் அனைத்து வேலைகளையும் முடிப்பீர்கள். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். தந்தையின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்தவும்.

கும்பம்:

தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும். தேவையற்ற கோபம், சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மீனம்:

வியாபாரத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் உங்கள் தன்னம்பிக்கையின் வலிமையால் அதை முறியடிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தாயின் ஆதரவு கிடைக்கும்.

Latest Videos

click me!