Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!

Published : Mar 04, 2026, 11:52 AM IST

Sani Peyarchi 2026 Palangal : வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8:26 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
17
Sani Peyarchi 2026 Palangal

வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். சனி பகவானின் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அவர் தற்போது மீன ராசிக்கு பெயர்ச்சியாவதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
ரிஷபம்

ரிஷப ராசியின் 9 மற்றும் 10-ம் வீடுகளுக்கு அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். அவர் இந்த பெயர்ச்சியின் போது ரிஷப ராசியின் 11 வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்கிறார். மீன ராசி சனி பகவானின் நட்பு வீடு என்பதுடன், குருவின் பார்வையும் இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொற்காலமாக அமையும். எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். பணியிடத்தில் தடைப்பட்ட வேலைகள் நடக்கும். இடமாற்றம், பதவி உயர்வுகள் கிடைக்கலாம். இழந்த அனைத்தும் மீண்டும் கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும்.

37
மிதுனம்

மிதுன ராசியின் 8 மற்றும் 9 ஆம் வீடுகளின் அதிபதியான சனி பகவான் பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணி சார்ந்த ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம். குடும்பத்தில் சமூகமான போக்கு நிலவும்.

47
கடகம்

கடக ராசியின் ஏழு மற்றும் எட்டாம் இடங்களின் அதிபதியான சனி பகவான் ஒன்பதாவது வீட்டிற்கு வருகிறார். இது பாக்கிய ஸ்தானம் ஆகும். இதன் காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். கடந்த கால முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். நீண்ட கால கனவுகள் நனவாகும். அதே சமயம் எந்த சூழ்நிலையையும் பொறுமையாக கையாள வேண்டியது அவசியம். கோபம் ஏற்படாமல் தவிர்ப்பது நல்லது.

57
துலாம்

துலாம் ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டின் அதிபதியான சனி பகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு செல்கிறார். இது சத்ரு, ருண, ரோக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். உடல் நலத்தில் அக்கறை செலுத்தினால் நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். பணியிடத்தில் பெருமைகள் கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

67
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு சனி பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக குடும்ப சூழல் மகிழ்ச்சியாக மாறும். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். தந்தை வழியிலான சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். தலைக்கனத்தை தவிர்க்க வேண்டியது அவசியம். பூர்வீக சொத்தில் இருந்த தகராறுகள் நீங்கும். ஆடை, ஆபரணம், சொத்துக்கள் சேரும்.

77
மகரம்

மகர ராசிக்கு சனி பகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கு செல்ல இருக்கிறார். இது ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விலகும் அமைப்பாகும். இது சகாய ஸ்தானம் என்பதால் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல ஏற்றமும், மாற்றமும் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். வாழ்வில் மேன்மைகள் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியில் முடியும். இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கலாம் ஊதிய உயர்வுகளுக்கான வாய்ப்புகள் உண்டு. புதிய வாகனம், சொத்து சேர்க்கை நடைபெறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories