கிரகங்களின் ராஜாவான சூரியன், மார்ச் 15, 2026 அன்று காலை 1:08 மணிக்கு மீன ராசியில் சஞ்சரித்து, ஏப்ரல் 14, 2026 செவ்வாய்க்கிழமை காலை 9:38 மணி வரை அங்கேயே இருப்பார். இந்த நேரத்தில், அவர் கேதுவுடன் சம சப்தக யோகத்தை உருவாக்குகிறார்.
இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஏழாவது வீட்டில் 180 டிகிரி கோணத்தில் அமைந்து, ஒருவரையொருவர் முழுப் பார்வையில் பார்க்கும்போது சம சப்தக யோகம் உருவாகிறது. கேது கன்னியிலும், சூரியன் மீனத்திலும் இருப்பார்கள். இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.