Jan 30 Rishaba Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, இன்று கம்முனு இருந்தீங்கனா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்.!

Published : Jan 29, 2026, 03:23 PM IST

January 30, 2026 Rishaba Rasi Palangal: ஜனவரி 30, 2026 ரிஷப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
பொதுவான பலன்கள்:

இன்று எந்த விஷயத்தை எடுத்தாலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பொறுமையை கையாள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க ஆன்மீக விஷயங்களில் அல்லது கேளிக்கை நிகழ்ச்சிகளில் மனதை திசை திருப்ப வேண்டும். கண் எரிச்சல் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு மறையும்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையைப் பொறுத்தவரை பண வரவு சீராக இருந்தாலும், அதிக செலவினங்கள் காணப்படும். சேமிப்புகள் குறையலாம். தேவையில்லாத தடைகள் காரணமாக நிதி ஸ்திரத்தன்மை குறைந்து காணப்படும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில சண்டைகள் ஏற்பட்டு மறையும். உங்கள் பேச்சாற்றல் மூலம் குடும்ப தகராறுகளை தீர்ப்பீர்கள். பணியிடத்தில் கவலை தரும் வகையில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நன்மை தரும். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது புல் வழங்குவது தடைகளை நீக்கும். ‘ஓம் நமோ நாராயணாய’ மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories