ரிஷப ராசி நேயர்களே, கிரக கோச்சாரப்படி ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நிலையில் சஞ்சரிக்கிறார். ராசியில் செவ்வாய் பகவான் அமர்ந்து தைரியத்தை தருகிறார். ஒன்பதாம் இடத்தில் சூரியன்-புதன் சேர்க்கை புதாத்திய யோகத்தை உருவாக்குகிறது. பத்தாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளர்.
பொதுவான பலன்கள்:
உங்களின் நீண்ட நாள் திட்டங்கள் இன்று நிறைவேறும். உங்கள் பேச்சில் வசீகரம் உண்டாகும். கடினமான காரியங்களைக் கூட உங்கள் புத்திசாலித்தனத்தால் எளிதில் முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற பிடிவாதத்தை தவிர்ப்பது வெற்றியைத் தரும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்ய உகந்த நாளாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது சேமிப்பை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கும்
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியாக நல்ல செய்திகள் கேட்பீர்கள்.. பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கலாம். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
பரிகாரம்:
இல்லத்தில் சுபிட்சம் பெருகவும், நிதிநிலை மேம்படமும் மகாலட்சுமி தாயாரை வழிபடலாம். சனிக்கிழமை என்பதால் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது வெல்லம் கலந்த பச்சரிசி வழங்குவது தடைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)