Astrology: வக்ர புதனுடன் சேரும் சூரியன்.. நவம்பர் 4 முதல் ‘குபேர யோகம்’ பெறப்போகும் 4 ராசிகள்!

Published : Oct 31, 2026, 07:01 AM IST

Astrology: விருச்சிகத்தில் நவம்பர் 4 அன்று அரிதான புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் மேஷம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம், செல்வ வளம் மற்றும் தொழில் வெற்றி பெறப்போகின்றன.

PREV
15
வக்ர புதனுடன் சேரும் சூரியன்

ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது ராசி மற்றும் நட்சத்திரப் பாதையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இப்படி கிரகங்கள் தங்களின் சுழற்சியின் போது ஒன்றுக்கொன்று இணையும் போது, மிகச் சக்திவாய்ந்த யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், வரும் நவம்பர் 4, 2026 அன்று விருச்சிக ராசியில் பிதுர்காரகனான சூரியனும், புத்திநாயகனான புதனும் ஒன்றாக இணையவுள்ளனர்.

கிரகங்களின் தலைவனான சூரியனும், கிரகங்களின் இளவரசனான புதனும் கரம கோர்க்கும் இந்த நிகழ்வு 'புதாதித்ய ராஜயோகத்தை' தோற்றுவிக்கிறது. குறிப்பாக, புதன் பகவான் வக்ர நிலையில் இருக்கும்போது இந்த சேர்க்கை நிகழ்வது மிகவும் அரிதான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிட நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அதிர்ஷ்டகரமான யோகம் அனைத்து ராசிகளிலுமே மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான யோகத்தையும், செல்வ வளத்தையும் அள்ளித் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து கீழே விரிவாக காண்போம்.

25
1. மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கையானது எதிர்பாராத திருப்பங்களையும், பேரதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் சுலபமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் தேடி வரும்.

தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, லாபம் இரட்டிப்பாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையில்லாத செலவுகள் குறைந்து, சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.

உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பழைய உடல்நலக் கோளாறுகள் மெல்ல மறையும்.

35
2. சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் புதனுடன் சேருவது, இந்த ராசிக்காரர்களுக்கு யோக பலன்களை வாரி வழங்கப்போகிறது. நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து வருமானம் வந்து சேரும். புதிய வீடு, நிலம் அல்லது நீண்ட நாள் கனவான வாகனம் வாங்கும் யோகம் கை கூடி வரும்.

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்களுடன் நல்உறவு நீடிக்கும். உங்களிடம் தைரியமும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.

45
3. விருச்சிகம்

விருச்சிக ராசியிலேயே இந்த புதாதித்ய யோகம் உருவாவதால், நேரடியாக இவர்களுக்கே அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். பல நாட்களாக உங்களை ஆட்டிப்படைத்த கடன் மற்றும் நிதிச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் மற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கணவன் - மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு பெரிய அளவிலான லாபத்தை ஈட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

55
4. மகரம்

மகர ராசியினருக்கு இந்த யோகம் பல்வேறு நன்மைகளையும், சுபச் செய்திகளையும் கொண்டு வரப் போகிறது. வெளிநாடு தொடர்பு உடைய தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு மிகச் சிறந்த ஆதாயம் கிடைக்கும்.

தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைத் தரும். வரன் தேடிக் கொண்டிருக்கும் வரன்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நன்மதிப்பையும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழுமையான ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.

குறிப்பு: இந்த ஜோதிட பலன்கள் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. தனிப்பட்ட ஜாதக அமைப்பிற்கு ஏற்ப பலன்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories