ஜோதிட சாஸ்திரத்தின் படி சனியும், செவ்வாயும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே சந்திக்கும் பொழுது உருவாகும் அரிய அமைப்புக்கு ‘பிரதியுதி யோகம்’ என்று பெயர். இந்த யோகம் தற்போது உருவாக உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நவகிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றுகின்றனர். அப்போது அந்த ராசியில் பயணித்து வரும் பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றனர். சில கிரகங்கள் பிற கிரகங்களை எதிரெதிரில் சந்திக்கும் பொழுதும் யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் சனியும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் நேர் எதிரே வரும்பொழுது உருவாகும் அரிய அமைப்புக்கு ‘பிரதியுதி யோகம்’ என்று பெயர். இது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 2025ல் சனிபகவான் மீன ராசியிலும், செவ்வாய் கன்னி ராசியிலும் நேருக்கு நேர் இருப்பதால் இந்த யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட உள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
24
1.மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகம் சிறப்பான பலன்களை கொடுக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகளின் மூலம் லாபம் பெருகும். வெளிநாடு தொடர்பான வணிகங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கலாம். நிதி நிலைமையில் எதிர்பாராத முன்றேற்றம் ஏற்படும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தேங்கி இருந்த கடன்கள் குறையத் தொடங்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உறவுகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றியை நோக்கிய பயணம் விரைவாகும். கடின உழைப்பிற்கான பலன்கள் கைக்கு வந்து சேரும்.
34
2.சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளது. உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் தலைமை பண்புகள் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை தொடங்குவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக வலுப்பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், நிலங்கள் வாங்கும் யோகமும், புதிய தொழில்கள் தொடங்கும் வாய்ப்புகளும் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடித்து, புதிய வெற்றிகளை அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தைரியமான முடிவுகளை எடுத்து அதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வெளிநாடு வேலைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
தனுசு ராசிக்காரர்களை பிரதியுதி யோகம் வாழ்க்கையில் உச்ச நிலைக்கு கொண்டு செல்லவுள்ளது. தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். புதிய முதலீடுகளை செய்து நல்ல லாபம் பெறலாம். நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலை நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்களும் வெற்றிகரமாக முடியும். இந்த யோகம் துலாம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கும் நல்ல சிறப்பான பலன்களை அளிக்க இருக்கிறது. இவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள், தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளிநாடு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு சிறப்பான வெற்றியும் நல்ல லாபமும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலானவை மட்டுமே. இந்த பலன்கள் அனைத்தும் பொதுவானவை. தனிப்பட்ட ஜாதகம், கிரக நிலைகள், தசா புத்தி மற்றும் அமைப்பை பொறுத்து பலன்களில் மாற்றங்கள் இருக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)