
ஆகஸ்ட் 11 முதல் 17 வரையிலான காலகட்டத்தில் கிரகங்களின் அமைப்பு அடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் அதிகளவில் பலன்களை அனுபவிக்க கூடிய டாப் 5 ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாக கிரக நிலைகள் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த வாரத்தில் முக்கியமாக, சூரியனின் பெயர்ச்சியும், புதனின் வக்ர நிவர்த்தியும் நிகழ உள்ளன.
சூரியன்:
இந்த வாரத்தின் பெரும்பாலான நாட்கள் (ஆகஸ்ட் 11-16) சூரியன் கடக ராசியில் இருப்பார். பின்னர், ஆகஸ்ட் 17 அன்று தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
புதன்:
மாதத்தின் தொடக்கத்தில் இருந்து வக்ர நிலையில் இருந்து வந்த புதன் பகவான் நாளை ஆகஸ்ட் 11 அன்று வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதியில் கடக ராசியில் பயணத்தைத் தொடர்வார்.
சுக்கிரன்:
இந்த வாரம் முழுவதும் சுக்கிரன் மிதுன ராசியிலேயே சஞ்சாரம் செய்வார்.
செவ்வாய்: செவ்வாய் பகவான் கன்னி ராசியில் சஞ்சரிப்பார்.
குரு: குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பார்.
சனி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.
ராகு மற்றும் கேது: ராகு ஐந்தாம் இடத்தில் (கும்ப ராசியில்) மற்றும் கேது பதினொன்றாம் இடத்தில் (சிம்ம ராசியில்) இருப்பார்கள்.
இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் இந்த வாரம் முழுவதும் நல்ல பலன்களை அனுபவிக்க கூடிய டாப் 5 ராசியினர் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசியைப் பொறுத்த வரையில் இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியில் முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். காதல் மற்றும் திருமண உறவுகளில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலைமை வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உங்கள் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்:
ஓம் நமோ பகவதே வாசுதேவே' என்ற மந்திரத்தை தொடர்ந்து 41 முறை ஜெபிப்பது நன்மைகளைத் தரும்.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது எண்ணங்கள் ஈடேற உதவும்.
கடக ராசிக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் பாராட்டுகள் குவியும். எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை மேம்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டில் படிக்க விரும்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிப்பது சிறப்பான பலன்களைத் தரும்.
விஷ்ணு வழிபாடு மற்றும் தியானம் செய்வது மன அமைதியை அதிகரிக்கும்.
இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமான வாரமாக இருக்கும். வாரத்தின் முதல் பாதியில் சில சவால்கள் இருந்தாலும், ஆகஸ்ட் 17 அன்று உங்கள் ராசி அதிபதியான சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவதால், இரண்டாம் பாதியில் உங்கள் பலமும், தன்னம்பிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். நிதி வரவு தாராளமாக இருக்கும். ஆகஸ்ட் 17-க்குப் பிறகு உங்கள் தொழில் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவது இந்த வாரம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
சிவபெருமானை வழிபடுவதும், சூரிய நமஸ்காரம் செய்வதும் உங்கள் மன அமைதிக்கு உதவும்.
துலாம் ராசிக்கு இது மிகவும் சாதகமான வாரம். உங்களுடைய கடின உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணப் பற்றாக்குறை நீங்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் உண்டாகும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அம்மனை வழிபடுவது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டு வரும்.
தினமும் சுக்கிரன் மந்திரத்தை உச்சரிப்பது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் அதிகரிக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக அமையும். தொழில் மற்றும் கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி தரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். 2ஆவது திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
எதிர்பாராத வகையில் நிதி உதவி கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும் நேரம் வந்துவிட்டது. சேமிப்பை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுவது உங்கள் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.
மஞ்சள் நிறப் பூக்களை வைத்து வழிபடுவது அல்லது மஞ்சள் நிற ஆடை அணிவது நன்மைகளைத் தரும்.