Rahu Ketu Transit 2025 Predictions For 3 Lucky Zodiac Signs : ராகு கும்பத்திற்கும், கேது சிம்மத்திற்கும் பெயர்ச்சியான நிலையில் ராகு கேதுவின் பொன்னான பெயர்ச்சி இந்த 3 முக்கியமான ராசிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட போகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Rahu Ketu Transit 2025 Predictions For 3 Lucky Zodiac Signs :
ஒவ்வொரு ஒன்றரை ஆண்டுகளுக்கும் ஒருமுறையும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அப்படி நிகழும் இந்த பெயர்ச்சியானது இந்த வருடம் வாக்கியப பஞ்சாங்கப்படி கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்ந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் மே மாதம் 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி 2025 நிகழ்கிறது.
26
ராகு கேது பெயர்ச்சி – வாழ்க்கையில் முன்னேறும் ராசிக்காரர்கள்
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நிகழும் ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானது. ராகு பகவான் எப்போதும் பின்னோக்கி நகர்வார். அதே போன்று கேது பகவானும் பின்னோக்கி நகர்வார். அதன்படி கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியானது. இந்த ராகு கேது பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராகு கேது பகவான் தனுசு, மேஷம், கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதைப் பற்றி பார்க்கலாம்.
36
கன்னி ராசிக்கான ராகு கேது 2025 பெயர்ச்சி பலன்:
கன்னி ராசிக்கு 6ஆவது இடத்திற்கு வந்த ராகு பகவான் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தி கொடுப்பார். ராகு பகவான் 6ல் இருந்தால் குரு கேந்திரத்தில் அஷ்ட லட்சுமி யோகம் உருவாகும். அப்படி உருவாகும் அஷ்ட லட்சுமி யோகம் குரு பெயர்ச்சிக்கு பிறகு செயல்பட தொடங்கும். கேது பகவான் கன்னி ராசிக்கு 12ஆவது இடத்திற்கு பெயர்ச்சியானார். கேதுவினால் உங்களுக்கு விரையங்கள் அதிகமாக இருக்கும். கன்னி ராசிக்கான ராகு கேதுவின் பெயர்ச்சி பொருளாதாரத்தில் ஏற்றத்தை உருவாக்கி கொடுப்பார். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.
மேஷ ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். லாபம் என்றால் பொருளாதாரத்தில் முன்னேற்றம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். லாபம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். கையில் காசு, பணம் தாராளமாக இருக்கும். இதுவரையில் வாடகை வீட்டிலிருந்த நீங்கள் இனி சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்றத்தை காண்பீர்கள்.
56
பிரிந்திருந்த குடும்பம் ஒன்று செரும். சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வியில் சேர்ந்து நன்றாக படிப்பார்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் தேடி வரும். சொத்து, சுகம் சேரும். ராகுவினால் எல்லாமே நல்லதாக நடக்கும்.
66
தனுசு ராசிக்கான ராகு கேது 2025 பெயர்ச்சி பலன்:
தனுசு ராசிக்கு 3ஆவது இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிருக்கிறார். 3ஆவது இடம் வெற்றிக்கான இடம். கேது பகவான் 9ஆவது இடத்திற்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். ராகு பகவான் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய இடத்திற்கு வந்திருக்கிறார். எனினும் அடிக்கடி உங்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும். உடல்நலனில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் மூத்த சகோதரியிடமிருந்து விலகியிருப்பது நல்லது.