Rahu Ketu Peyarchi 2026 Warning For 5 Zodiac Signs: 2026 ராகு-கேது பெயர்ச்சியால் எந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்? உடல்நலம், தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பரிகாரங்கள் இதோ.
ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு மற்றும் கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் தங்கி சுப-அசுப பலன்களை கொடுப்பார்கள். இதனிடையே திருக்கணித பஞ்சாங்கப்படி, 2026 டிசம்பர் 5 ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து விலகி மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து விலகி கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்தப் பெயர்ச்சி, அனைத்து 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஒரு சில ராசியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அசுப பலன்களை கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
26
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மன அமைதியின்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ராகுவின் தாக்கத்தால், முடிவெடுப்பதில் தயக்கம் ஏற்படும். மேலும், தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால் நிதிச் சிக்கல்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பேச்சில் கவனம் தேவை என்று சொல்லப்படுகிறது.
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் உடல் நலனில் நிச்சயம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நாள்பட்ட நோய்கள் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், அவர்கள் தங்கள் சக வயதினரிடமிருந்து, குறிப்பாக வேலைத் துறையில், அழுத்தத்தை எதிர்கொள்வார்கள்.
சிம்ம ராசி கொண்அ தொழிலதிபர்களுக்கு இது ஒரு கடினமான காலமாக இருக்கும். குறிப்பாக, அவர்கள் முதலீடுகளில் அவசரப்படக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மேலும், குறிப்பாக கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பயணம் செய்யும் போதும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
56
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், இந்தக் காலகட்டத்தில் அது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நற்பெயரும் புகழும் பாதிக்கப்படும். மாணவர்களின் கவனமும் சிதறக்கூடும். நிதிப் பரிவர்த்தனைகளில் யாரையும் நம்பக்கூடாது.
66
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். வேலை மாற முயற்சிப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். நிதி விஷயங்களிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.