பிப்ரவரி மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்! பண இழப்பு மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் - உஷார்!

Published : Feb 05, 2026, 11:56 PM IST

Rahu and Mars Conjunction Predictions in Tamil : பிப்ரவரி மாதத்தின் நிகழக்கூடிய செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை மூன்று ராசியினருக்கு கடினமான காலத்தை கொண்டு வரப்போகிறது.

PREV
15
பிப்ரவரி மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்! பண இழப்பு மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் - உஷார்!

ஜோதிட ரீதியாக இந்த மாதத்தில் மூன்று ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. அந்த வகையில் ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது கடினமான காலங்களை கொண்டு வருவதோடு நிதி, மன அழுத்தம் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தப் போகிறது. இப்படி ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கையின் காரணமாக பிரச்சனையை சந்திக்க போகும் ராசிக்காரர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்

25
பிப்ரவரி மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்

ஏற்கனவே ராகு கும்பத்தில் இருக்கும்போது வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி நிகழக்கூடிய செவ்வாயின் பெயர்ச்சியானது கும்ப ராசியில் விழுகிறது. கும்ப ராசியில் நிகழும் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை மிகப்பெரிய அளவில் செல்வாக்கு மிக்கதாக கருதப்படுகிறது. எனினும் சனி பகவானின் ராசி என்பதால் இந்த சேர்க்கை அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

35
மேஷ ராசி

அந்த வகையில் செவ்வாய் மற்றும் ராகு  சேர்க்கையானது அதிக அளவில் பாதிக்கப்படுவது மேஷ ராசி. இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கை பொருளாதாரம் மற்றும் மன ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுத்தும். ரவி கற்றும் செலவுகள் அதிகரிக்கும். பண பற்றாக்குறை ஏற்படும் சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடலாம்.

45
மீன ராசி

மீன ராசி அன்பர்களுக்கு மன கவலையும் குடும்ப பிரச்சனையும் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். இல்லை என்றால் விபத்துகளை சந்திக்க நேரிடலாம்.

55
மகர ராசி

மகர ராசியினருக்கு ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது பொருளாதாரத்தில் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும். அதோட வேலையில் வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு தூக்கமின்மை பிரச்சினை வரலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories