இந்த '3' செடிகளை உங்க வீட்டில் வைக்காதீங்க; செல்வம் கரைந்து விடும்!

Published : Feb 22, 2025, 08:16 PM IST

Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகளை வீட்டில் வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. அது என்னென்ன என்று இங்கு காணலாம்.

PREV
14
இந்த '3' செடிகளை உங்க வீட்டில் வைக்காதீங்க; செல்வம் கரைந்து விடும்!
இந்த '3' செடிகளை உங்க வீட்டில் வைக்காதீங்க; செல்வம் கரைந்து விடும்!

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளும் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு நேர்மறை அல்லது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோல சில செடிகளும், மரங்களும் வாஸ்துவில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சில செடிகள் மற்றும் மரங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வீட்டிற்கு துரதிஷ்டத்தையும், வறுமையையும் மற்றும் பண இழப்பையும் கொண்டு வரும்.

24
அரசமரம் :

வாஸ்து சாஸ்திரத்தின் படி அரசமரம் வீட்டிற்குள் எதிர்மறை சக்தியை கொண்டு வரும் எனவே வீட்டில் அரச மரத்தை வைத்தால் அதை உடனே அகற்றி விடுங்கள்.

புளிய மரம்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி புளியமரம் வீட்டில் வைப்பது அசம்பமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மரம் வீட்டிற்கு எதிர்மறை சக்தியை கொண்டு வரும். மேலும் இதை வீட்டில் வைத்தால் வீட்டில் உள்ளவர்களிடம் பயம் மற்றும் அச்சத்தின் சூழலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: பெண்கள் தூங்கும் முன் 'இப்படி' செய்தால் பிரச்சனைகள் விலகிவிடும்..!

34
முள் செடிகள்:

முள் செடிகள் வீட்டிற்குள் ஒருபோதும் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. இவற்றை வீட்டில் வைப்பதால் உறவுகளில் கசப்பு ஏற்படும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே தூரம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

எலுமிச்சை செடி:

வீட்டில் எலுமிச்சை செடியை வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது இது வீட்டில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த செடியை வீட்டில் வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பதற்றத்தையும், கசப்பையும் உருவாக்கும். எனவே உங்கள் வீட்டில் எலுமிச்சை செடியை வைத்திருந்தால் உடனே அதை வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள்.

இதையும் படிங்க:  தொடர்ந்து பண நெருக்கடியா? நீங்கள் செய்த சின்ன தப்பு தான் காரணம்

44
நெல்லிக்காய்:

நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்றாலும், வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடியை வீட்டில் வைப்பது நல்லதல்ல. காரணம் இது வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை இழக்கப் பண்ணும்.

குறிப்பு: 

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் காய்ந்த மரங்கள் மற்றும் செடிகள் வைப்பது நல்லதல்ல. இவை வீட்டில் எதிர்மறையை அதிகரிக்கச் செய்யும்.

Read more Photos on
click me!

Recommended Stories