Birth Month : இந்த 3 மாசத்துல பொறந்தவங்க செம்ம லக்கி!! அவங்க தொட்டதெல்லாம் துலங்கும்

Published : Nov 29, 2025, 06:35 PM IST

ஜோதிடத்தின் படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்களாம். அது எந்தெந்த மாதம் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Successful Birth Months

பொதுவாக எல்லாருமே வெற்றி வாழ்க்கை வாழ வேண்டுமென்று தான் விரும்புவார்கள். வெற்றியை அடைய பலரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த கொடுப்பினை கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. அது எந்தெந்த மாதங்கள் என்று இங்கு பார்க்கலாம்.

24
ஜனவரி :

ஜோதிடத்தின் படி ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் தாங்கிக் கொள்ள கூடிய வலிமையுள்ளவர்கள். அவர்கள் சவால்களை சுலபமாக எதிர்கொள்வார்கள். அவர்கள் தங்கள் விரும்பும் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதில் செயல்படுவார்கள். இவர்கள் தங்கள் இலக்கில் உச்சத்தை அடையும் வரை ஓய மாட்டார்கள். தோல்வியை குறித்த அஞ்ச மாட்டார்கள். தோல்வியை எதிர்கொண்டாலும் வெற்றி பெறுவதற்கான சாகசமாக அதை கருதுவார்கள்.

34
மார்ச் :

ஜோதிடத்தின் படி மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் பச்சபாதம், கற்பனை திறனுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தக்க வைத்துக் கொள்வார்கள். வெளிப்படையான இயல்பு உடையவர்கள். இவர்கள் வெற்றியை அடைய நிதானமாக ஓடுவார்கள்.

44
டிசம்பர் ;

ஜோதிடத்தின் படி டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சூழலுக்கு ஏற்ப சிறந்து விளங்குவர். இவர்கள் தனித்துவமான சிந்தனை, தொலைநோக்கு பார்வை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் தெரியாது விஷயங்களை கற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கமாட்டார்கள். இவர்கள் விரும்பும் வெற்றியை அடைய பல கோணத்தில் சிந்தித்து செயல்படுவர். இவர்கள் திட்டம் தோல்வியடைந்தால் சோர்ந்து போக மாட்டார்கள். புதிய தொடக்கத்தை கண்டுபிடித்து அதை நோக்கி செல்வர்.

Read more Photos on
click me!

Recommended Stories