100 ஆண்டுகளுக்குப் பின் கும்ப ராசியில் நடக்கும் மேஜிக்.! லக்கி பாஸ்கராக மாறும் 5 ராசிகள்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!

Published : Feb 09, 2026, 11:42 AM ISTUpdated : Feb 09, 2026, 03:12 PM IST

Panchagrahi Rajayoga 2026: பிப்ரவரி 17, 2026 அன்று கும்ப ராசியில் உருவாகும் பஞ்சகிரக ராஜயோகம், ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்பான சுப பலன்களைத் தரும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

PREV
16
பஞ்சகிரக யோகம் 2026

பிப்ரவரி 2026-ல் கும்பத்தில் பஞ்சகிரக ராஜயோகம் உருவாகிறது. பிப். 17-ல் சூரியன், புதன், சுக்கிரன், சனி, சந்திரன் கும்ப ராசியில் சங்கமிப்பதால் இந்த சக்திவாய்ந்த யோகம் உருவாகிறது. இது பல ராசிகளுக்கு சிறப்புப் பலன்களைத் தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசியின் 11 ஆம் வீடான வருமானம் அல்லது லாப ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. எனவே பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் பண லாபம், வருமான வளர்ச்சி, வேலையில் ஸ்திரத்தன்மை உண்டாகும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும்.

36
மிதுனம்

மிதுன ராசிக்கு 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதன் காரணமாக அதிர்ஷ்டம் முழுமையாக கைகொடுக்கும். புதிய வேலை, பதவி உயர்வு, வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கலாம். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.

46
சிம்மம்

சிம்ம ராசிக்கு 7-ம் வீட்டில் இந்த பஞ்சகிரக யோகம் அமைகிறது. ஏழாம் வீடு என்பது களத்திர ஸ்தானமாகும். இது திருமணம் மற்றும் கூட்டாண்மைகளை குறிக்கும் வீடாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம், புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும்.

56
கன்னி

கன்னி ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. ஆறாம் வீடு என்பது சத்ரு, ருண, ரோக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் எதிரிகளால் ஏற்படும் சிக்கல்கள் குறையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

66
கும்பம்

கும்ப ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் ஐந்து கிரகங்களும் இணைவதால் இந்த யோகத்தின் முழு பலன்களையும் கும்ப ராசியினர் பெற இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories