விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி அதிக நன்மைகளை தர இருக்கிறது.
குருபகவான் உங்கள் ராசியின் ஒன்பதாவது இடத்தில் வர இருக்கிறார்.
பத்தாம் இடத்திற்கு உரிய சூரிய பகவான் 12ஆம் இடத்தில் நீச்சமடைகிறார்.
சுக்கிர பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி வக்கிர நிவர்த்தி அடைகிறார். சுக்கிரன்,
செவ்வாய் ஆட்சி பலம், குரு உச்சம் பெற்றிருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெறுவீர்கள்.
குடும்ப உறவுகள்:
ஏழாம் இடத்திற்கு உரிய சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் குடும்ப வாழ்க்கையில் அளவில்லாத மகிழ்ச்சி கிடைக்கும். காதலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். காதலில் தோல்வி அடைந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். மனைவியுடன் நீண்ட நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த அனைத்து பிரச்சனைகளும் விலகும்.
தொழில்:
ஒன்பதாம் இடத்தில் குரு உச்சம் பெறுவதால் திடீர் அதிர்ஷ்டம் பெருகும். செவ்வாயை குரு பார்ப்பதால் அற்புதமான யோகத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். பத்தாவது இடத்திற்கு காரகரான சூரியன் நீச்சமடைகிறார். எனவே புதிய தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. இருக்கும் தொழிலை வைத்து வாழ்க்கையை நடத்தலாம். புதிய தொழில் தொடங்கும் யோசனைகள் வந்தாலும் அதை அமைதியாக கடந்து விடுவது நல்லது. ஏற்கனவே செய்து வரும் தொழிலில் நல்ல நிலையை அடைவீர்கள்.
யோகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தீபாவளி முதல் பொன்னான நேரம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.குருபகவான் ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் எதிர்பாராத யோகங்கள் கிடைக்கும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை செவ்வாய் மீது விழுவது அற்புதமான யோகத்தை தரும். இந்த காலத்தில் உங்களது வாழ்க்கை தலைகீழாக மாறி மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
ஆரோக்கியம்:
செவ்வாய் பகவான் இரண்டாம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது வெளி மாநிலத்தில் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகுந்த கவனம் தேவை. அதேசமயம் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். சிலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனமாக இருங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)