மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்திற்கு உரிய சனி பகவான் நவம்பர் 28 ஆம் தேதி வக்ரமடைகிறார்.
12 மற்றும் மூன்றாம் வீடுகளுக்குரிய குரு பகவான் ஏழாம் வீட்டில் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
இல்லற வாழ்க்கையில் இன்பம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியும், அமைதியும் காணப்படும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினருக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வீர்கள். வாழ்க்கையில் இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியும், அன்பும் நிறையும். சுக்கிரன் பத்தாம் இடத்தில் ஆட்சி பெறுகிறார் மற்றும் குரு ஏழாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். பழைய காதலர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.
ஆரோக்கியம்:
குரு செவ்வாயின் வீடான பதினோராவது வீட்டை பார்வையிடுகிறார். அங்கு செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாயை குரு பார்ப்பதால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நீதிமன்றத்தில் நீங்கள் தொடுத்திருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும். அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள்.
கலவையான பலன்கள்:
செவ்வாய் பகவான் வலிமையை இழப்பதால் நன்மையைப் பெறுவீர்கள். ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன் செவ்வாயின் வீட்டில் இருப்பதால் நன்மையும், தீமையும் கலந்து கலவையான பலன்கள் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் வெற்றி கிடைக்கும். அரசுப் பணி, அரசின் சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
கல்வி மற்றும் வேலை:
வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நீங்கள் ஆசைப்பட்ட துறையை தேர்ந்தெடுத்து படிப்பீர்கள். தொழிலில் நல்ல கூட்டாளிகள் கிடைப்பார்கள். இதன் காரணமாக வியாபாரம் பெருகும். பொருளாதாரத்தில் ஏற்றம் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இந்த காலகட்டம் இனிமையானதாக இருக்கும்.
முக்கிய குறிப்பு:
வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. உயிருக்கு ஆபத்து தரும் விஷயங்களில் ஈடுபடுதல் கூடாது. ஆபத்தான விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)