கும்ப ராசிக்காரர்களின் ராசியின் அதிபதியான சனிபகவான் இரண்டாம் இடத்தில் வக்ரமாக இருப்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் இழப்புகள் ஏற்படக்கூடும்.
2 மற்றும் 11 வது வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான், ஆறாம் இடத்தில் உச்சம் அடைவதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
தொழிலில் புதிய உச்சத்தை அடைவீர்கள். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவிகள், புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
தொழில் மற்றும் வேலை:
குரு பகவான் நல்ல இடத்தில் அமர இருப்பதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் நிம்மதி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். வெளிநாடு வாய்ப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். புதிய வேலைகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
நிதி நிலைமை:
குரு பகவானின் அருளால் பண வரவு அதிகரிக்கும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் கைக்கு கிடைக்கலாம். பழைய நிறுவனங்களில் இருந்து வரவேண்டிய செட்டில்மெண்டுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி உங்கள் வாரிசுகளுக்கு சொத்துக்கள் கிடைக்கும்.
கல்வி:
ஆறாம் இடத்தில் குரு உச்சம் அடைவதால் மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். 6 ஆம் இடத்திலிருந்து குரு, 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும். 12ஆம் இடத்தை பார்ப்பதால் இல்லற வாழ்க்கை இனிமையானதாக அமையும். தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதாரம் கணிசமாக உயரும்.
குடும்ப உறவுகள்:
4,9 ஆகிய இடங்களுக்கு சொந்தக்காரரான சுக்கிரன் ஆட்சி பெறுவதால், மனைவியுடன் பிரச்சனைகள் சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தாய் தந்தையை விட்டு பிரியும் வாய்ப்பு ஏற்படலாம். வயிறு மற்றும் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
அரசு வேலை:
ஏழாம் வீட்டிற்குரிய சூரியன் மறைந்திருந்ததால் வெளிநாடு செல்வதற்கான காரியங்கள் தடைபட்டிருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். செவ்வாய் பகவான் ஆட்சி பெறுவதால் தீயணைப்புத்துறை, காவலர் பணி, இராணுவ உள்ளிட்ட துறைகளில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)