Diwali Rasi Palan: முக்கிய ஸ்தானத்திற்கு வந்த குரு பகவான்.! தீபாவளி முதல் அம்பானி ஆகப் போகும் துலாம் ராசியினர்.!

Published : Oct 19, 2025, 06:30 PM IST

Thulam rasi diwali rasi palangal 2025: இந்த தீபாவளி திருநாளை ஒட்டி துலாம் ராசிக்கான ராசி பலன்கள் மற்றும் கிரக நிலைகள் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. துலாம் ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர்.

PREV
தீபாவளி ராசி பலன்கள் 2025 - துலாம்

தீபாவளி திருநாள் அன்று சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமடைந்து இருப்பார்.

குருபகவான் தொழிற் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.

சனிபகவான் நோய், கடன், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் இருப்பார்.

சுக்ர பகவான் துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று வலுவாக இருப்பார்.

பொதுவான பலன்கள்:

தீபாவளி சமயத்தில் குரு பகவான் உங்கள் ராசியின் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். பொதுவாக பத்தில் குரு வருவது பதவி பறிபோகும் அல்லது வேலையில் சிக்கல் வரும் என்கிற எண்ணத்தைத் தரும். எனவே உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம். உடன் வேலை செய்பவர்கள் அல்லது மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்

குரு பார்வை:

குருவின் பார்வை உங்களின் இரண்டாம் வீடு (தனம்), நான்காம் வீடு (சுகம்), ஆறாம் வீடு (கடன், நோய்) ஆகியவற்றில் விழுகிறது. குரு இரண்டாம் வீட்டை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன், நோய், கஷ்டங்கள் உங்களை விட்டு நீங்கும். கடன் சுமை குறையும். நான்காம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் நிம்மதியான நிலை காணப்படும்.

நிதி நிலைமை:

சனி பகவான் உங்கள் ஆறாம் வீட்டில் இருப்பது சிறப்பான நிலையாகும். சனியின் இந்த நிலை பண வரவை அதிகரிக்கும். பழைய கடன்கள் தீர வழி பிறக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சுக்ராதித்ய ராஜயோகம்:

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்றிருப்பதால், சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இது உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும். புதிய தொழில் வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கலாம். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் கைகூடும். உறவில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

நிதானம் தேவை:

சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதால் ஆரம்பத்தில் சிறிய அளவில் குழப்பங்கள், ஆரோக்கியத்தில் பின்னடைவு போன்ற நிலை இருக்கும். இருப்பினும் சுக்கிரனின் பலத்தால் இந்த சிக்கல்கள் விரைவில் சரியாகும். துலாம் ராசிக்காரர்களுக்கு தீபாவளியானது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், கடன் நிவர்த்தியையும் தரும் காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படுவது அவசியம்.

சுக்கிரனின் ஆட்சி பலம்:

ராசிநாதன் சுக்கிரனின் ஆட்சி பலத்தால் இந்த நேரத்தில் உண்டாகும் ராஜயோகம் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் பெரிய ஆர்டர்களை முடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நிம்மதியும், நிதானமும் கிடைக்கும். இருப்பினும் எந்த ஒரு விஷயத்தை செய்யும் முன்னரும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. பேசுவதற்கு முன்னர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த வார்த்தையை பேசுவதற்கு முன்னரும் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories