Birth Date : இந்த தேதில பிறந்த பெண்கள்கிட்ட வாக்குவாதம் பண்ணாதீங்க! கோவத்துல எரிமலையா வெடிப்பாங்க

Published : Oct 15, 2025, 05:58 PM IST

எண் கணிதத்தின் படி சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் கோபக்காரியாக இருப்பார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14

இந்து மதத்தில் ஜோதிடத்தின் அடிப்படையில் தான் எண் கணிதமும் பார்க்கப்படுகிறது. அவர்கள் எந்த அளவுக்கு ஜோதிடத்தை நம்புகிறார்களோ, அதே அளவுக்கு எண் கணிதத்தையும் நம்புகிறார்கள். எண் கணிதத்தின் படி ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம்.

24

அதாவது ஒருவர் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை அடிப்படையில் அதற்கான எண்ணை கண்டறியலாம். உதாரணமாக ஒருவர் பிறந்த தேதி 15 என்றால் அவரது கூட்டுத்தொகை 6. அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், இயல்பாகவே கோபக்காரியாக திகழ்வார்கள். அது எந்தெந்த தேதி என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

34

எண் 1 : 

எண் கணிதத்தின் படி, எந்த மதத்திலும் 1,10 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண் 1 இன் கீழ் தான் வரும். இந்த மூன்று தேதிகளில் பிறந்த பெண்கள் கோபக்காரியாக இருப்பார்கள். இவர்கள் அநீதி மற்றும் தவறான நடத்தையை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். முக்கியமாக இவர்கள் விஷயத்தில் யாராவது தலையிட்டால் அல்லது இவர்களது சுயமரியாதையை சீண்டினால் பொறுத்துக் கொள்ளாமல் எரிமலை போல வெடிப்பார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு கோபம் வரும். கோபம் மட்டுமல்ல அதிகமாக எரிச்சல் அடையும் குணமும் இவர்களுக்கு உண்டு.

44

இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிக சுயமரியாதையை விரும்புவார்கள். இவர்களின் கடின உழைப்பு மற்றும் திறமையால் பிறரை எளிதில் கவர்ந்து விடுவார்கள். எந்தவொரு முடிவையும் இவர்கள் துல்லியமாக எடுப்பார்கள். இவர்கள் தங்களது வரம்பில் எப்போதுமே உறுதியாக இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நேர்மையாக செயல்பட்டால் வெற்றியை சுலபமாக காண்பார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories