Birth Date: இந்த '4' பிறந்த தேதிகளை குறிச்சுக்கங்க!! இவங்க '30' வயசுக்கு மேல வேற லெவலுக்கு போவாங்க

Published : Jul 04, 2025, 07:38 PM IST

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் வெற்றி மிகவும் தாமதமாகவே வரும். அவற்றின் பட்டியல் இங்கே.

PREV
15
எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வெற்றி தாமதமாகும்?

நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக கடினமாகவும் உழைப்போம். அந்தவகையில் இளம் வயதிலேயே சிலர் வாழ்க்கையில் வெற்றியை காண்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் வெற்றியை ஒருபோதும் காணமாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் எண் கணிதத்தின்படி, ஒரு சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் வெற்றி அவர்களுக்கு மிகவும் தாமதமாகவும், அதுவும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு தான் காண்பார்கள். எனவே, அது எந்தெந்த செய்திகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

25
7ஆம் தேதி..

எண் கணிதத்தின் படி 7ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு வெற்றி மிகவும் தாமதமாகவே வரும் அவர்கள். இவர்கள் எந்த ஒரு வேலையும் செய்ய முன் முதலில் தங்களை பரிசோதித்துக் கொள்வார்கள். செய்யும் வேலையில் தெளிவு கிடைக்கும் வரை எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒருபோதும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள். நன்றாக யோசித்து நிதானித்து பிறகுதான் எடுப்பார்கள். இந்த காரணத்திற்காக தான் அவர்களுக்கு வெற்றி தாமதமாக வருகிறது. குறைந்தபட்சம் இவர்களுக்கும் 30 வயது வரை வெற்றியே வரவே வராது. 30 வயதிற்கு பிறகு தான் வெற்றியை காண்பார்கள்.

35
14ஆம் தேதி..

எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 14 ஆம் தேதியில் பிறந்தவர்களும் தங்களது வாழ்க்கையில் வெற்றியை தாமதமாக தான் காண்பார்கள். இவர்கள் தங்களின் நிரூபிக்க நீண்ட நேரம் எடுக்கும். பாதி வயதை கடந்த பிறகு தான் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும்? சாதிக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தெளிவு இவர்களுக்கு கிடைக்கும். இவர்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவும் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் தங்களுக்கென ஒரு தளத்தை உருவாக்குவார்கள். எதிர்காலத்தில் தொழில் வாழ்க்கையில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு காட்டுவார்கள்.

45
25ஆம் தேதி..

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையிலும் வெற்றி தாமதமாகவே வரும். இந்த தேதியில் பிறந்தவர்கள் உள்ளார்ந்த ஞானத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் ஆன்மீகம், கலை மற்றும் திறமையுள்ளவர்கள். இவர்கள் தங்களுக்கென ஒரு நிலையான பாதையை பின்பற்றி தங்களின் நிரூபித்து காட்டுவார்கள். இவர்கள் வழக்கமான தொழில் திட்டங்களுக்கு பதிலாக, தங்களது ஆர்வங்களை மதிப்பு மிக்க நன்மைகளாக மாற்றுவார்கள்.

55
30ஆம் தேதி..

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 30 ஆம் தேதியில் பிறந்தவர்கள் வெற்றியை தாமதமாக தான் ருசிப்பார்கள். இவர்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்கள். இளம் வயதிலேயே சுயமரியாதையே வளர்த்துக் கொள்ள இவர்களுக்கு சிறிது காலம் ஆகும். இவர்கள் தங்களது உறவுகள் மூலம் கிடைக்கும் அனுபவங்களை வலிமையாக்குவார்கள். உண்மையான வெற்றி அவர்களின் மதிப்பு தான் என்பது அவர்கள் தாமதமாக தான் புரிந்து கொள்வார்கள் இவர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றியை அடைவதில்தான் மிகவும் கவனம் செலுத்துவார்கள். மேலும் அவர்கள் விரும்பும் காரியத்திலும் வெற்றியை காண்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories