கன்னி ராசி நேயர்களே, புதனின் வக்ர பெயர்ச்சி காரணமாக முடிவுகள் எடுப்பதில் தாமதம் அல்லது குழப்பங்கள் ஏற்படலாம். நவம்பர் 16 விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாவது தைரியம் மற்றும் சமூக தொடர்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். நவம்பர் 14 முதல் 16 வரை சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் உணர்ச்சி சமநிலை மற்றும் தெளிவு கிடைக்கும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத தன வரவுக்கும் வாய்ப்பு உண்டு. முந்தைய முதலீடுகள் லாபம் தரும். புதிய முதலீடுகளுக்கு குறிப்பாக அசையா சொத்துக்களுக்கு திட்டமிடுவது நல்லது. ஆனால் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். பிள்ளைகள் அல்லது குடும்பத் தேவைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். செலவுகளை ஒழுங்கமைப்பது முக்கியம். கொடுத்த கடன் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக காது, மூக்கு, தொண்டை, சைனஸ், பல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்தால் உடல் சோர்வு, வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் வரலாம். முறையான தூக்கம், சரியான உணவுப் பழக்கம் ஆகியவை உடலை சமநிலைப்படுத்த உதவும். சிறிய உடல்நலக் குறைகளை புறக்கணிக்காமல் இருப்பது நல்லது.
கல்வி:
புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சி காரணமாக மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைக்க வேண்டி வரலாம். படிப்பில் தடைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். ஆசிரியர்கள் அல்லது வழிகாட்டுதலின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் ஒழுக்கமும், முயற்சியும் அதிகாரிகளால் பாராட்டப்படும். புதிய பொறுப்புகளை ஏற்பதன் மூலம் தொழிலில் புதிய வளர்ச்சியைப் பெறுவீர்கள். புதன் பகவானின் வக்ரம் காரணமாக தொழில் திட்டங்களில் தாமதம் அல்லது தடைகள் ஏற்படலாம். எனவே நிதானத்துடன் அணுகவும். வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வணிகத்தை விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள் சரியான திட்டமிடலுடன் செய்ய வேண்டும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறுப்பினர்களுடன் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இதன் காரணமாக உறவுகள் பலப்படும். பரஸ்பரம் நம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணம் குறித்த சுப செய்திகள் கிடைக்கலாம். வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உறவுகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
பரிகாரம்:
புதன்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. ஏற்படும் தடைகளில் இருந்து விடுதலைப் பெற தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனிக்கிழமைகளில் ஏழைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் அல்லது உணவு அளிப்பது சனியின் அருளைப் பெற்றுத் தரும். மனக்குழப்பங்கள் நீங்க யோகா, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)