ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களின் தளபதியாக போற்றப்படுபவர் செவ்வாய் பகவான். தைரியம், தன்னம்பிக்கை, வீரம், ஆற்றல் மற்றும் நிலப் புலன்களுக்கு அதிபதியாக விளங்கும் இவர், தோராயமாக 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி இருப்பிடத்தை மாற்றக்கூடியவர்.
அந்த வகையில், தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் பகவான், விரைவில் கடக ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார். ஏற்கனவே கடக ராசியில் சுப கிரகமான குரு பகவான் உச்சம் பெற்றுப் பயணித்து வருகிறார். இதனால், கடகத்தில் குரு மற்றும் செவ்வாய் ஒன்றாக இணையும் அரிய கிரக சேர்க்கை நிகழ்கிறது.
நீச்சபங்க ராஜயோகம் என்றால் என்ன?
பொதுவாக கடக ராசி என்பது செவ்வாய் பகவானுக்கு 'நீச்ச' வீடாகும். அதாவது அங்கு செவ்வாய் தன் முழு பலத்தையும் இழப்பார். ஆனால், அதே கடக ராசியில் குரு பகவான் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், செவ்வாயின் நீச்சத் தன்மை நீங்கி ‘நீச்சபங்க ராஜயோகம்’ உருவாகிறது.
இந்த யோகமானது தொழில் வளர்ச்சி, நிதி முன்னேற்றம், புதிய சொத்து சேர்க்கை மற்றும் வியாபார விரிவாக்கம் ஆகியவற்றில் மிகச் சிறந்த நன்மைகளைத் தரும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே பிரதிபலித்தாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அமையவிருக்கும் யோகப் பலன்களை விரிவாகப் பார்ப்போம்.