நாளை (மார்ச் 5) உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு உண்டாகும்.!

Published : Mar 04, 2026, 04:38 PM IST

குரு மற்றும் சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு செல்வ வளத்தைத் தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
நவபஞ்சம ராஜயோகம் 2026

வேத ஜோதிடத்தின்படி, மார்ச் 5 இரவு 10.41 மணிக்கு குருவும் சூரியனும் 120 டிகிரி இடைவெளியில் இருப்பார்கள். இது நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு சாதகமாக அமையும். இந்த ராசிகளின் வேலை மற்றும் தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கம் ஏற்படும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

24
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் பத்தாம் வீட்டில் குருவும், ஆறாம் வீட்டில் சூரியனும் சஞ்சரிக்கின்றனர். இதனால் வேலையில் லாபம் உண்டாகும். சிலருக்கு தலைமைப் பதவிகள் தேடி வரும். கடினமான பணிகளையும் முடித்து வெற்றிகளைக் குவிப்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள்.

34
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் அதிக லாபத்தைத் தரும். குரு ஏழாவது வீட்டிலும், சூரியன் ஒன்பதாம் வீட்டிலும் உள்ளனர். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வருமானம் கூடும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சித்தி உண்டாகும். அனைத்து துறைகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நனவாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

44
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். இரண்டாம் வீட்டில் சூரியனும், ஆறாம் வீட்டில் குருவும் உள்ளனர். இதனால் திடீர் பண ஆதாயம் உண்டாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் உருவாக வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான பலன்களை அறுவடை செய்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த நீண்ட கால பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தனிமையில் இருப்பவர்களுக்கு திருமண வரன் தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories