Name Numerology Calculator: நியூமராலஜி படி சில தேதிகளில் பிறந்தவங்களுக்கு பேய், பிசாசு போன்ற அமானுஷ்ய சக்திகளை உடனே உணர முடியும். அவங்களோட உள்ளுணர்வு ரொம்ப வலுவா இருக்கும். நடக்கப்போற கெட்ட விஷயங்களை முன்கூட்டியே கணிச்சிடுவாங்க.
சிலருக்கு எதிர்காலத்துல நடக்கப்போற கெட்ட விஷயங்கள் முன்கூட்டியே தெரிஞ்சிடும். அதுமட்டுமில்லாம, நெகட்டிவ் எனர்ஜி, அதாவது பேய், பிசாசு நடமாட்டத்தை கூட அவங்களால சீக்கிரமா உணர முடியும். இதுக்கு அவங்களோட பிறந்த தேதியும் ஒரு காரணமா இருக்கலாம். எண்கணித ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட தேதிகள்ல பிறந்தவங்களுக்கு உள்ளுணர்வு (Intuition) ரொம்பவே வலுவா இருக்குமாம். அவங்களுக்கு அமானுஷ்ய சக்திகளோட அறிகுறிகள் சீக்கிரமா தெரியவரும். அந்த தேதிகள் பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.
நியூமராலஜி படி, ஒருத்தரோட முழு பிறந்த தேதியையும் (நாள், மாதம், வருடம்) கூட்டி, வர்ற எண்ணை ஒற்றை இலக்க எண்ணா மாத்தணும். உதாரணத்துக்கு, ஒருத்தரோட பிறந்த தேதி 15-08-1998-ன்னு வெச்சுக்கலாம். அதை இப்படி கூட்டணும்:
1+5+0+8+1+9+9+8 = 41
இப்போ இந்த 41-ஐ மறுபடியும் கூட்டணும்:
4+1 = 5
இப்படி வர்ற மூல எண் அல்லது அதிர்ஷ்ட எண்ணை வெச்சுதான் பொதுவான பலன்களைப் பார்க்குறாங்க.
மூல எண் 4 (4, 13, 22 மற்றும் 31 தேதிகளில் பிறந்தவர்கள்)
ஒரு மாதத்தில் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 4 ஆகும். எண்கணிதத்தில் இது ராகுவின் எண்ணாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் மற்றவர்களின் நடத்தை மற்றும் சூழலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட விரைவாக உணர்ந்துகொள்வார்கள். இவர்களின் ஆறாவது அறிவு (Sixth Sense) மிகவும் சக்தி வாய்ந்தது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை அவர்களால் முன்கூட்டியே உணர முடியும். புராணங்களின்படி, ராகு ஒரு அரக்கனின் தலை என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்மறை ஆற்றலை (Negative Energy) உணரும் திறன் அதிகமாக இருக்கும்.
மூல எண் 7 (7, 16 மற்றும் 25 தேதிகளில் பிறந்தவர்கள்)
ஒரு மாதத்தில் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 7 ஆகும். எண் 7 கேதுவுடன் தொடர்புடையது. கேது மர்மத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தனியாக இருக்க விரும்புவார்கள் என்றும், சில சமயங்களில் திடீரென விசித்திரமான அறிகுறிகளையோ அல்லது பதற்றத்தையோ உணரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. இவர்களால் பேய், பிசாசுகளின் நடமாட்டத்தை உடனடியாகக் கண்டறிய முடியும். கேது திடீர் நிகழ்வுகளுக்கும் காரணியாக இருப்பதால், இவர்களுக்கு நடக்கவிருக்கும் கெட்ட நிகழ்வுகள் முன்கூட்டியே தெரிந்துவிடும்.
மூல எண் 8 (8, 17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 8 ஆகும், இது சனியுடன் தொடர்புடையது. சனி கிரகத்தின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு உள்ளுணர்வு சக்தி மிகவும் வலுவாக இருக்கும். தங்களைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளைக் கூட உடனடியாகக் கவனித்துவிடுவார்கள். இவர்களின் மூளை வேகமாகச் செயல்படும், வரவிருக்கும் ஆபத்தை பல சமயங்களில் முன்கூட்டியே உணர்ந்துவிடுவார்கள். பயமுறுத்தும் அல்லது எதிர்மறை ஆற்றல் உள்ள இடங்களில் இவர்கள் எளிதில் அசௌகரியமாக உணரக்கூடும்.
உங்கள் பிறந்த தேதி இதில் வருகிறதா? அல்லது மேலே கூறியது போன்ற விசித்திரமான அனுபவங்கள் உங்களுக்கும் எப்போதாவது நடந்துள்ளதா உங்கள் அனுபவங்களை கீழே உள்ள கமெண்ட் (Comment) பகுதியில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!
பொறுப்புத் துறப்பு (Disclaimer)
இவை அனைத்தும் நியூமராலஜி மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. இந்த தகவல்கள், மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே கருத வேண்டும்.