Birth Month: இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல கம்பீரமானவங்களாம்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?

Published : Aug 15, 2025, 03:37 PM ISTUpdated : Aug 15, 2025, 03:38 PM IST

ஜோதிட சாஸ்திரங்களின் படி சில மாதங்களில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல கம்பீரமும், தைரியமும், தகுதிகளும் கொண்டு விளங்குவார்களாம். அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Birth Month Numerology

ஜோதிடத்தின்படி ஒருவரின் பிறந்த மாதம் அவர்களின் ஆளுமை, குணங்கள் மற்றும் வாழ்க்கையை பெருமளவு தீர்மானிக்கிறது. சில மாதங்களில் பிறந்த ஆண்கள் அரசர்களைப் போல கம்பீரமான தோற்றமும், தலைமைப் பண்புகளும், மற்றவர்களை ஈர்க்கும் வசீகரமும் கொண்டவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையால் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்களாக விளங்குகின்றனர். அதன்படி ராஜாவுக்குரிய குணங்களை கொண்ட நான்கு மாதங்களில் பிறந்த ஆண்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

25
ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்த ஆண்கள் இயற்கையிலேயே ஒரு அரசனைப் போன்ற தோரணையை பெற்றவர்கள். இவர்களிடம் அபார தன்னம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத உறுதி கொண்ட மனம் உள்ளது. இது அவர்களை எந்த சூழ்நிலையிலும் முன்னணியில் இருக்க வைக்கிறது. இவர்கள் பயமின்றி புதிய பாதைகளை உருவாக்குவார்கள். மற்றவர்கள் தயங்கும் இடத்திலும் தைரியமாக முன்னேறுவார்கள். இவர்களுடைய மிகப்பெரிய பலமே அவர்களுடைய உறுதியான மனப்பான்மை தான். தங்கள் இலக்குகளை அடைய எந்த தடைகளையும் தாண்டிச் செல்வார்கள். ஒரு அரசனைப் போல குடும்பத்தை நண்பர்களை அல்லது பணியிடத்தில் உள்ளவர்களை பாதுகாப்பாக வழி நடத்துவார்கள். மற்றவர்களின் மரியாதையையும், விசுவாசத்தையும் இயல்பாக பெறுவது இவர்களின் சிறப்பு.

35
ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆண்கள் ஒரு அரசனைப் போல தோற்றத்தையும் தாராள மனப்பான்மையும் கொண்டவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் வருகை அந்த இடத்தையே ஒளிரச் செய்கிறது. இவர்களின் வசீகரமான புன்னகையும், அன்பான பேச்சும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கிறது. ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே மற்றவர்களின் நலனை முதன்மையாக கருதுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும் எதையும் செய்ய தயாராக இருக்கின்றனர். இவர்களின் தலைமைத்துவம், அனைவரையும் அரவணைத்து செல்லும் இயல்பு ஆகியவை தனித்துவமானது. ஒரு உண்மையான அரசனைப் போல இவர்கள் தங்களை நம்பி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றனர்.

45
ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் ஒரு அரசனைப் போல தொலைநோக்குப் பார்வையும் அறிவைத் தேடிய பயணமும் கொண்டவர்கள். இவர்கள் எப்பொழுதும் ஒரு புதிய விஷயங்களை கற்று, உலகை முழுமையாக ஆராய்ந்து மற்றவர்களுக்கு வழி காட்ட விரும்புகின்றனர். தான் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்க நினைக்கின்றனர். அவர்களின் திறந்த மனப்பான்மை மற்றவர்கள் தங்கள் எல்லைகளை விரிவு படுத்த ஊக்குவிக்கிறது. ஜூன் மாதம் பிறந்த ஆண்களின் மிகப்பெரிய பலமே அவர்களின் அறிவுத்திறன் தான். எந்த ஒரு முடிவானாலும் அவசரப்படாமல் பொறுமையாக, ஆழமாக சிந்தித்து, நிதானமான முடிவுகளை எடுப்பார்கள். இவர்களின் ஆலோசனைகள் மற்றவர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை. ஒரு அரசனைப் போல தங்கள் சாம்ராஜ்யத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இவர்கள் தயங்குவதில்லை.

55
அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண்கள் ஒரு உண்மையான அரசனைப் போல ஒழுக்கத்துடனும், தலைமைத்துவத்தின் மறு உருவமாகவும் திகழ்கின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து அதை திட்டமிட்டு, உறுதியுடன் முடித்துக் காட்டுவார்கள். இவர்களின் கடின உழைப்பும், லட்சியமும் இவர்களை இயற்கையாகவே உயர் பதவிகளுக்கு கொண்டு செல்கிறது. அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண்கள் ஒரு விஷயத்தை உறுதியான அடித்தளத்துடன் கட்டமைப்பார்கள். இது அரசர்களுக்கு உண்டான ஒரு குணமாகும். தங்கள் குடும்பத்திற்காகவோ, பணியிடத்திற்காகவோ, நண்பர்களுக்காகவோ தங்களுடைய முழு அர்ப்பணிப்பையும் அளிப்பார்கள். இவர்களின் ஒழுக்கமும் நேர்மையும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும்.
 

முக்கிய குறிப்பு

ஜனவரி, ஏப்ரல், ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிறந்த ஆண்கள் ஜோதிட சாஸ்திரங்களின் படி ஒரு அரசனைப் போல கம்பீரமான குணங்களையும், தலைமைத்துவ பண்புகளையும் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இது ஜோதிட ரீதியிலான கருத்துக்கள் மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இந்த மாதத்தில் பிறந்த ஆண்களின் பொதுவான குணங்களே இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவர்களின் தன்னம்பிக்கை, வசீகரம், தொலைநோக்கு பார்வை, ஒழுக்கம் ஆகியவை இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. ஆனால் இந்த குணங்களை வளர்த்துக் கொள்வது தனிப்பட்ட மனிதர்களின் கையில் உள்ளது. அனைவரும் முயற்சி செய்தால், இந்த குணங்களை வளர்த்துக் கொண்டால் நாமும் அரசனைப் போன்று விளங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories