Astrology: 30 ஆண்டுகளுக்குப் பின் கிருஷ்ண ஜெயந்தியில் வக்ர நிலையில் 3 கிரகங்கள்.! அதிர்ஷ்டத்தை குவிக்கும் 3 ராசிகள்.!

Published : Aug 15, 2025, 10:04 AM IST

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் 3 கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பதால் 3 ராசிகளுக்கு குறிப்பிடத் தகுந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Krishna Jayanthi 2025

பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாள் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில், அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் 16, 2025 கிருஷ்ண ஜெயந்தி நாளில் சனி, ராகு மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இது முதல் முறையாக நிகழ்கிறது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். ஜோதிடத்தின் படி இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், மூன்று ராசிகளுக்கு குறிப்பிடத்தகுந்த அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

25
வக்ர நிலையில் உள்ள மூன்று கிரகங்கள்

வக்ர நிலை என்பது ஒரு கிரகம் தனது பயணப் பாதையில் பின்னோக்கி நகர்வது போல தோன்றுவதை குறிக்கிறது. இது ஜோதிடத்தில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று வக்ர நிலையில் மூன்று கிரகங்கள் உள்ளது. சனி நீதி மற்றும் கர்மாவின் கிரகமாக அறியப்படுகிறது. மீன ராசியில் வக்ர நிலையில் இருக்கும் சனி ஆன்மீக வளர்ச்சி, சிந்தனை மற்றும் கடந்த கால செயல்களின் பலன்களைக் குறிக்கிறது. அதேபோல் அசுரர்களின் தலைவனாக கருதப்படும் ராகு மற்றும் கேது இருவரும் நிழல் கிரகங்களாக அறியப்படுகின்றனர். இவர்களும் வக்ர நிலையில் பயணிக்கின்றனர். இந்த மூன்று கிரகங்களில் வக்ர நிலை கிருஷ்ண ஜெயந்தியின் ஆன்மீக முக்கியத்துவத்துடன் இணைந்து மூன்று ராசிகளுக்கு நிதி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது.

35
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பான நாளாக அமையும். இவர்களுக்கு எதிர்பாராத பணவரவு, முதலீடுகளில் இருந்து லாபம், நிலுவையில் உள்ள பணம் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குறிப்பாக தந்தையின் ஆதரவு மற்றும் தந்தை வழி சொந்தங்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கிருஷ்ணரின் அருளால் மன அமைதியும், ஆன்மீகப் பயணங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் வழிபாடு மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.

45
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளானது தொழில் மற்றும் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து பணவரவு உண்டாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் உருவாகும். இந்த கிரக நிலையால் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை மேம்படும். இதனால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் வெண்ணெயுடன் கற்கண்டு கலந்து கிருஷ்ணருக்கு படைத்து வழிபடலாம்.

55
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் மூன்று கிரகங்களின் வக்ர நிலையானது பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த உள்ளது. புதிய வாகனங்கள் அல்லது சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். பணியிடத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட தொழில் திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். நிலுவையில் இருந்த நிதிகள் வந்து சேரும். அதீத பணவரவால் பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலைமையில் உறுதியான முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் மேம்படும். கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து கிருஷ்ணர் அல்லது பெருமாள் ஆலயங்களுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடலாம்.

(குறிப்பு: இந்த ஜோதிடக் கணிப்புகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வானியல் நிலைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை நபருக்கு நபர் மாறுபடலாம். எனவே எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னரும் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது)

Read more Photos on
click me!

Recommended Stories