மேஷ ராசிக்கு ஜூன் 2025 மாதம் எப்படி? காதல், திருமணம், வேலை கை கூடுமா?

Published : Jun 08, 2025, 05:13 PM IST

Mesha Rasi June 2025 Matha Rasi Palan in Tamil : மேஷ ராசிக்கான ஜூன் 2025 மாத ராசி பலன் எப்படி இருக்கிறது, குரு, சனி மற்றும் ராகு கேதுவின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு சாதகமான பலனை தருமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
அஸ்ட்ராலஜி, ராசி பலன்கள் தமிழ், மேஷ ராசி பலன்கள்

Mesha Rasi June 2025 Matha Rasi Palan in Tamil : புத்தாண்டு பிறந்து அதற்குள்ளாக 5 மாதங்கள் கடந்து இப்போது 6ஆவது மாதமும் வந்துவிட்டது. நமக்கு எதுவுமே நல்லது நடக்கவில்லையே என்று கவலைப்பட்ட மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த ஜூன் 2025 மாதம் எப்படி இருக்கிறது, எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

25
ஜூன் 2025 ராசி பலன் மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏராளமான நன்மைகள் நடக்கபோகிறது. உங்களது ராசிக்கு அதிபதி செவ்வாய் பகவான். அவர், உங்களது ராசிக்கு 4ஆவது வீட்டில் கடக ராசியில் அமர்கிறார். இது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். ஆனால், அதன் பிறகு உருவாகும் ராஜயோகம் உங்களுக்கு கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும்.

35
மேஷம் ஜூன் 2025 பலன்கள்

ஜூன் மாத தொடக்கத்தில் திருமணமாகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கை கூடும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். ஒரு சிலருக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்படக் கூடும். இதன் காரணமாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாத பிற்பகுதியில் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படக் கூடும். வருமானம் அதிகரிக்கும்.

45
மேஷ ராசிக்கான ஜூன் மாத ராசி பலன்

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உங்களுக்கு தந்தையின் பரிபூரண அருள் கிடைக்கும். அலுவலகத்தில் சலசலப்பு ஏற்படக் கூடும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புனித யாத்திரைகள் செல்ல நேரிடும்.

55
ஜூன் 2025 ராசி பலன்

வேலைப்பளு அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். செலவுகள் குறையும். இருந்தாலும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ஜூன் மாதம் மேஷ ராசியினருக்கு கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories