புதன் சுக்கிரன் பெயர்ச்சி 2026: ஜூன் 11 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு அசுர வளர்ச்சி! ஜாக்பாட்!

Published : Jun 02, 2026, 06:49 AM IST

Mercury Venus Transit 2026: புதன் சுக்கிரன் பெயர்ச்சியால் ஜூன் 11ஆம் தேதி முதல் 3 ராசிகளுக்கு அசுர வளர்ச்சி ஏற்படபோகுது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
புதன் சுக்கிரன் பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்தின் நகர்வும் மனித வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. அந்த வகையில், வரும் 2026 ஜூன் 11 அன்று ஒரு அபூர்வமான விண்வெளி நிகழ்வு நடக்கவுள்ளது. புத்தி கூர்மை, சாதுரியம் மற்றும் வியாபாரத்திற்கு காரகனான புதன் பகவானும், சொகுசு, காதல், செல்வம் ஆகியவற்றுக்கு அதிபதியான சுக்கிர பகவானும் ஒரே நாளில் தங்களது நட்சத்திரங்களை மாற்றப் போகிறார்கள்.

இந்த இரட்டை நட்சத்திர இடமாற்றம் மக்களின் சிந்தனை, தொழில்முறை, பொருளாதார நிலை மற்றும் குடும்ப உறவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதாவது கிரகங்களின் இளவரசனான புதன் ஜூன் 11 காலை 11:30 மணிக்கு புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைகிறார். ஆகஸ்ட் 8 வரை இதே நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். அதே நாளில் மதியம் 2:11 மணிக்கு சுக்கிரன் பூசம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார். ஜூன் 23 வரை இந்த நட்சத்திரத்தில் நீடிப்பார். இந்த இரு கிரகங்களின் சுப பார்வையால், ஜூன் 11 முதல் அசுரவளர்ச்சியைக் காணப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று விரிவாக பார்ப்போம்.

24
ரிஷபம்

உங்கள் ராசி நாதனான சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் உங்களுக்குப் பொன்னான காலத்தை கொண்டுவரப் போகிறது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் அனைத்தும் தடங்கலின்றி முடியும். இதனால் மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். சாதிக்க முடியாது என்று நினைத்த காரியங்களைக் கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

பணவரவு: பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும். வங்கிச் சேமிப்பு உயரும்.

குடும்பம்: குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி, வெள்ளை நிற இனிப்புகளை நிவேதனம் செய்து வழிபடவும்.

34
சிம்மம்

புதனின் நட்சத்திர இடமாற்றம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் வெற்றிக் கதவுகளை அகலத் திறக்கவுள்ளது.

தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பழைய மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். உடல்நலம் சீராகவும், உற்சாகமாகவும் இருக்கும்.

உத்தியோகம்: அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும். மேலதிகாரிகளின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

வியாபாரம்: தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வருமானத்திற்குப் புதிய வழிகள் பிறக்கும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, ஓம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.

44
துலாம்

இந்த இரட்டை கிரகங்களின் நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்களை அள்ளித் தரும். நீங்கள் தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். நீண்ட நாள் கனவாக இருந்த வெளிநாட்டுப் பயணம் அல்லது ஆன்மீகப் பயணம் கைக்கூடும். பணியிடத்தில் உங்களின் திறமையைப் பாராட்டி கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். சமூகத்தில் உங்களது அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.

சொத்து சேர்க்கை: புதிய வாகனம் வாங்குவது அல்லது வீடு, நிலம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்யும் எண்ணம் நிறைவேறும்.

திருமண வாழ்க்கை: கணவன்-மனைவி இடையே இருந்த பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, இல்லற வாழ்க்கை இனிமையாக மாறும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை மொச்சை பயறு நைவேத்தியம் செய்து, ஏழை எளிய பெண்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை வழங்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories