புதன் பெயர்ச்சி 2026.. இந்த 4 ராசிகளுக்கு இனி குபேர யோகம் தான்.. பணம் கொட்ட போகுது!

Published : May 10, 2026, 09:18 PM IST

Mercury Transit 2026: ஜோதிட சாஸ்திரத்தின்படி புதன் ஒரே வாரத்தில் 3 முக்கிய மாற்றங்களை செய்வதால் 4 ராசிகள் ராஜயோகம் பெற உள்ளன. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம். 

PREV
15
புதன் மெகா பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புத்தி கூர்மை, தகவல் தொடர்பு திறன், கல்வி மற்றும் வணிக வெற்றிக்கு புதன் பகவானே அச்சாணியாக விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளை ஆட்சி செய்யும் புதன், பொதுவாக 21 நாட்களுக்கு ஒருமுறை தனது இருப்பிடத்தை மாற்றும் இயல்பு கொண்டவர்.

இந்த மே மாதத்தில், புதன் ஒரே வாரத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை செய்கிறது. அதாவது மே 7ம் தேதி புதன் பகவான் பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். மே 13ம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். மே 15ம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார். ஒரே வாரத்தில் நிகழும் இந்த அடுத்தடுத்த மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அபரீதமான பலன்களை வாரி வழங்கவுள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

25
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாகும். குறிப்பாக குடும்ப உறவுகளில் நிலவி வந்த கசப்புகள் நீங்கும். உங்கள் துணையுடன் ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால், அது விலகி நெருக்கம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். புதன்கிழமைகளில் பசு மாட்டிற்கு அருகம்புல் அல்லது பச்சை நிறக் காய்கறிகளை உணவாக வழங்கினால் உங்கள் குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளை நீக்கி, லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

35
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் காலக்கட்டம் இது. வீண் செலவுகளைக் குறைத்து, நீண்ட நாட்களாக திட்டமிட்டபடி பணத்தைச் சேமிப்பீர்கள். புதிய ஸ்டார்ட்-அப் அல்லது தொழிலைத் தொடங்க இதுவே மிகச்சரியான தருணம். நீண்ட நாள் கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நலப் பாதிப்புகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'விஷ்ணு சகஸ்ரநாமம்' கேளுங்கள் அல்லது பாராயணம் செய்யுங்கள். இயலாதவர்கள் "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். தேவையற்ற மருத்துவச் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

45
கன்னி

கன்னி ராசிக்கு அதிபதியான புதன் பலமான நிலையில் இருப்பதால், உங்களுக்கு மன அமைதி தேடி வரும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பணியிடங்களில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட்டில் ஏற்கனவே செய்த முதலீடுகள் இப்போது கைமேல் பலன் தரும். ஏழை மாணவர்களின் கல்விக்குத் தேவையான புத்தகங்கள், பேனா அல்லது நோட்டுப் புத்தகங்களை வாங்கித் தானமாக வழங்குங்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரும் லாபத்தைத் தரும்.

55
கும்பம்

கும்ப ராசியினருக்கு நிதி ரீதியாக இது பொற்காலம் என்றே சொல்லலாம். உங்கள் புத்திசாலித்தனமான முடிவுகளால் பெரிய லாபத்தை ஈட்டும் வாய்ப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்களுடனான பிணைப்பு வலுவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. எதைத் தொட்டாலும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சாற்றல் மூலம் கடினமான காரியங்களையும் எளிதில் சாதிப்பீர்கள். புதன்கிழமை காலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். முதலீடுகளில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories