Baba Vanga Predictions: மே 11 முதல் 17 வரை.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட் வாரம்! பாபா வங்கா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Published : May 10, 2026, 08:03 PM IST

புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகளின்படி, மே 11 முதல் 17 வரையிலான வாரத்தில் ஐந்து ராசியினருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. தொழில், மற்றும் குடும்ப வாழ்வில் பெரும் முன்னேற்றங்களைக் காண்பார்கள். 

PREV
16
தீர்க்கதரிசி பாபா வங்கா

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் உலகின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா. பார்வை மாற்றுத்திறனாளியான இவர் உலகத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே கணித்து மிகவும் பிரபலமடைந்தவர். இந்நிலையில் பாபா வங்காவின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, மே 11 முதல் 17 வரையிலான வாரத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் மற்றும் என்னென்ன பலன்களை கொடுக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

26
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் நிலவி வந்த சச்சரவுகள் நீங்கி, கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்ய இதுவே சரியான தருணம்.

36
கடகம்

மன அழுத்தத்தில் இருந்த கடக ராசியினருக்கு இந்த வாரம் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்குப் பாராட்டு கிடைப்பதுடன், புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதால், புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

46
சிம்மம்

சிம்ம ராசியினருக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி, புதிய வருமான வழிகள் பிறக்கும். அதிர்ஷ்டத்தின் துணையோடு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாளுவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும். திருமண வாழ்க்கையில் துணையுடனான உங்கள் உறவு வலுப்பெறும்.

56
தனுசு

மே 11 முதல் 17 வரையிலான காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இந்த வாரம் வேகம் எடுக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் அலுவலக வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்குப் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு கூடும்.

66
கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. கிரகங்களின் சாதகமான தாக்கத்தால், நிதி ஆதாயமும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும். வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. நிதி நெருக்கடிகள் தீர்ந்து, சந்தையில் உங்கள் செல்வாக்கு உயரும்.

Read more Photos on
click me!

Recommended Stories