Astrology: கடக ராசியில் வக்ரம் அடைந்த புதன் பகவான்.. இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் தான்!

Published : Aug 12, 2025, 01:33 PM ISTUpdated : Aug 12, 2025, 01:34 PM IST

ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிலவரப்படி புதன் பகவான் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதன் காரணமாக நான்கு ராசிகள் சுப பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்த புதன் பகவான்

ஜோதிட சாஸ்திரங்களின் படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சி அடைகின்றனர். கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கின்றன. அப்போது சில யோகங்களை உருவாக்குகின்றன. சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி 12 ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும் சில சமயங்களில் தீமைகளையும் தருகின்றன. அந்த வகையில் கிரகங்களில் இளவரசராக கருதப்படும் புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். ஆகஸ்ட் 11, 2025 மதியம் 12:22 மணிக்கு வக்ர நிவர்த்தி நடைபெற்றது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை பெற உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பிற கிரகங்களால் சில அசுப பலன்கள் ஏற்பட்டாலும், புதனின் வக்ர நிவர்த்தி காரணமாக சில நன்மைகளும் கிடைக்க உள்ளது. மேஷ ராசியின் நான்காவது வீட்டின் வழியாக புதன் செல்வதால் அவர்களுக்கு பிற கிரகங்கள் ஏற்படுத்திய யோகங்கள் காரணமாக ஏற்படும் அசுப பலன்களை தீவிரம் குறைய இருக்கிறது. வேலை மற்றும் தொழிலில் அவர்களுக்கு ஏற்படும் தடை விலக இருக்கிறது. பொருளாதார நிலை மேம்படலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கலாம். வணிகர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். புதிய வேலையில் சேர விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

35
2.மிதுனம்

மிதுன ராசியின் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். புதன் இரண்டாவது வீட்டில் இருக்கும்பொழுது சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. குறிப்பாக பணப் பிரச்சினைகள், கடன்கள், நிதி சிக்கல்கள் தீர உள்ளது. நிலுவையில் இருந்த வேலைகள் முடிந்து வெற்றியை நோக்கிய பயணம் தொடர இருக்கிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்க உள்ளது. புதனின் நேரடி சஞ்சாரம் நிதி ஸ்திரத்தன்மையை உயர்த்தலாம். பேச்சு மற்றும் தொடர்பு திறன்கள் மூலம் வணிகத்தில் வெற்றி கிடைக்கும். புதிய பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இது பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும்.

45
3. கன்னி

கன்னி ராசியின் 11 வது வீட்டில் புதன் இருப்பதால் நண்பர்கள் மற்றும் சமூகத்தில் ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கலாம். கலை மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பரம்பரை மற்றும் குடும்ப சொத்துக்களில் இருந்து செல்வம் பெறுவதற்கான காலகட்டம் நெருங்கியுள்ளது. விலை உயர்ந்த பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆரோக்கியம் மேம்படும்.

55
4.துலாம்

துலாம் ராசியின் பத்தாவது வீட்டில் புதன் குடியேற இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கும் சாதகமான சூழல்கள் ஏற்பட உள்ளது. புதிய வருமான வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் உருவாக இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு சுமூகமான சூழல் ஏற்படும். புதிய லாபம் தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.

(குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுவானவை. இது இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் அதில் உள்ள கிரகத்தின் நிலைகள் மற்றும் தசா புத்திகள் வேறுபடும் என்பதால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி கலந்த ஆலோசிப்பது நல்லது)

Read more Photos on
click me!

Recommended Stories