ஆகஸ்ட் 11, 2025 முதல் புதன் கிரகம் பின்வட்டப் பயணத்தை நிறுத்தி, நேரடி போக்கில் கடக ராசியில் நுழைந்துள்ளது. ஜோதிட ரீதியாக, புதன் கிரகம் தொடர்பு, வணிகம், கல்வி, பேச்சுத்திறன், கணக்குப் புத்திசாலித்தனம், மற்றும் விரைவான முடிவுகள் ஆகியவற்றை ஆளுகிறது. இது எந்த ராசியில் நகர்கிறதோ, அந்த ராசியின் ஆற்றல் எல்லா ராசிகளுக்கும் விதிவிலக்கு இல்லாமல் தாக்கம் ஏற்படுத்தும்.
பலர் சாதனை படைக்கும் காலம் தொடங்கியது.!
கடக ராசி ஒரு நீர்த் தத்துவ ராசி. இது குடும்பம், உணர்ச்சி, பாதுகாப்பு, மற்றும் மன அமைதியை குறிக்கிறது. புதன் இங்கு சேர்ந்ததால், பலரின் வாழ்க்கையில் உணர்ச்சி மற்றும் அறிவு ஒன்றிணையும் சக்தி உருவாகும். ஆனால் எல்லோருக்கும் இது நன்மை மட்டுமே தராது; சிலருக்கு சோதனையும் தரும்.