Numerology: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் செம லக்கி.. மண்ணையும் தங்கமாக்குவாங்க!

Published : May 17, 2026, 05:31 PM IST

எண் கணிதத்தின்படி, இரண்டு குறிப்பிட்ட எண்களில் பிறந்த ஆண்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். இவர்கள் இளம் வயதிலேயே வேலையில் பெரிய உயரங்களை அடைந்து, தங்களது உழைப்புக்கான பலனை சீக்கிரமே அனுபவிப்பார்கள். 

PREV
14
எண் கணிதம்

எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனி குணம் உண்டு. சில எண்களைக் கொண்டவர்கள் தைரியமாகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள், மற்றவர்கள் கடினமாக உழைப்பார்கள். இதில், இரண்டு எண்கள் ஆண்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. இந்த எண்களில் பிறந்தவர்கள், தங்கள் உழைப்புக்கான பலனை மிக விரைவாகப் பெறுவார்கள். இவர்கள் தங்கள் வேலையில் வேகமாக முன்னேறி, இளம் வயதிலேயே 'பாஸ்' நிலைக்கு வந்துவிடுவார்கள். அந்த எண்கள் எவை என்று பார்ப்போம்.

24
ராஜ வாழ்க்கை வாழும் ராடிக்ஸ் 1

எந்தவொரு மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்த ஆண்களின் கூட்டு எண் 1 ஆகும். இந்த எண்ணின் அதிபதி நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஆவார். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த இந்த ஆண்கள் இயல்பிலேயே சிங்கம் போன்ற தைரியமும், ராஜ கம்பீரமும் கொண்டவர்கள். பிறருக்குக் கீழ் வேலை செய்வதை விட, தாங்களே முன்னின்று வழிநடத்தவே விரும்புவார்கள். இவர்களிடம் தலைமைப் பண்புகள் (Leadership Quality) மிக அதிகமாக இருக்கும். ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதை அடையும் வரை ஓயமாட்டார்கள். இவர்களின் தனித்துவமான சிந்தனைத் திறன், கார்ப்பரேட் நிறுவனங்களில் இவர்களை இளம் வயதிலேயே உயர் அதிகாரியாக மாற்றும் அல்லது சொந்த தொழிலில் கொடிகட்டிப் பறக்க வைக்கும்.

34
மண்ணையும் தங்கமாக்கும் ராடிக்ஸ் 5

எந்தவொரு மாதத்திலும் 5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்த ஆண்களின் கூட்டு எண் 5 ஆகும். இந்த எண்ணிற்குரிய அதிபதி புத்தி கூர்மை மற்றும் வணிகத்திற்குரிய கிரகமான புதன் ஆவார். புதனின் ஆசி பெற்ற இவர்கள் அசாத்திய அறிவாளிகளாகவும், சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் திகழ்வார்கள். கலகலப்பான சுபாவம் கொண்ட இவர்களிடம் சமயோசித புத்தியும் (Presence of Mind), அபாரமான கம்யூனிகேஷன் திறனும் இருக்கும்.

44
வெற்றியின் ரகசியம்

இவர்களின் பிசினஸ் மூளைக்கு நிகர் இவர்களேதான். 'மண்ணைக் கூட தங்கமாக மாற்றி விற்கும் சாதுர்யம்' இவர்களுக்கு உண்டு. புதிய முயற்சிகளில் ரிஸ்க் எடுக்க அஞ்சாத குணமே இவர்களை உச்சிக்குக் கொண்டு செல்லும். குறிப்பாக பேங்கிங், ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், மீடியா மற்றும் தொழில் துறைகளில் மிகக் குறுகிய காலத்தில் பெரிய பணக்காரர்களாகவும், முதலாளிகளாகவும் உருவெடுப்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories