அம்மாவின் அன்பைப் போல அப்பாவின் அரவணைப்பும் முக்கியம். ஆனால், எல்லாராலும் சிறந்த அப்பாவாக முடியாது. ஜோதிடம் மற்றும் உளவியல் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்களுக்கு இயல்பாகவே தந்தை பாசம் சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆண்கள் பலருக்கும் குழந்தை பிறந்த பிறகு தான் குடும்ப பொறுப்பே வரும். ஆனால் சில மாதங்களில் பிறந்த ஆண்களுக்கு இயற்கையாகவே தானாக தந்தைக்கான பொறுப்பு, அரவணைப்பு போன்றவை வந்து விடும் என சொல்லப்படுகிறது. நீங்கள் இந்த 4 மாதங்களில் பிறந்தவர் என்றால், பெஸ்ட் அப்பா லிஸ்டில் நீங்களும் இருக்கீங்க.
25
ஜனவரி - 'மிஸ்டர் பெர்பெக்ட்' அப்பா:
ஜனவரி மாதத்தில் பிறந்த அப்பாக்களுக்குப் பொறுப்பு அதிகம். இவங்க ரொம்ப கண்டிப்பானவங்க மாதிரி வெளிய தெரிஞ்சாலும், உள்ளுக்குள் குழந்தைகளுக்காக உருகிப் போவாங்க. தன் பிள்ளைங்க லைஃப்ல ஜெயிச்சு பெரிய ஆளாகணும்னு, சின்ன வயதில் இருந்தே அவங்களுக்கு ஒரு ஃபிரண்ட் மாதிரி வழிகாட்டுவாங்க. இவங்ககிட்ட வளர்ற பிள்ளைங்க கண்டிப்பாக சொசைட்டியில் சாதிப்பாங்க!
35
மே - 'ஃபிரண்ட்லி' அப்பா:
மே மாதத்தில் பிறந்த ஆண்கள் எப்போவுமே எனர்ஜடிக் பாஸ்! இவங்க அப்பாவாக மாறினதுக்கு அப்புறம், அவங்க குழந்தைகளோட சேர்ந்து இவங்களும் குழந்தையாக மாறிடுவாங்க. வீடியோ கேம் விளையாடுறது, சைக்கிள் ஓட்டக் கத்துக் கொடுக்குறதுன்னு வீடே இவங்களால் எப்போவுமே கலகலப்பாக இருக்கும். இவங்ககிட்ட பிள்ளைங்க எந்த ரகசியத்தையும் மறைக்காமல் ஓப்பனாக பேசுவாங்க.
செப்டம்பர் மாதத்தில் பிறந்த அப்பாக்களோட ஸ்பெஷாலிட்டியே அவங்களோட பொறுமைதான். குழந்தைங்க என்ன தப்பு பண்ணினாலும் கத்தாம, அடிக்காம, அன்பாக பேசி புரிய வைப்பாங்க. அம்மா அடிக்க வரும்போது பிள்ளைகளுக்கு கேடயமாக நிக்குறதே இவங்கதான்! படிப்பு, கலைன்னு குழந்தைகளோட தனித்திறமையை கண்டுபிடிச்சு அதை வளர்க்குறதுல இவங்கதான் பெஸ்ட்.
55
டிசம்பர் - 'ட்ரீம் மேக்கர்' அப்பா:
டிசம்பர் மாதத்தில் பிறந்த அப்பாக்களுக்குக் குழந்தைகளோட ஆசையை நிறைவேத்துறது தான் உலகத்துலயே ஆகச்சிறந்த சந்தோஷம். பிள்ளைங்க வாயைத் திறந்து கேட்குறதுக்கு முன்னாடியே, அவங்களுக்கு என்ன வேணும்னு பார்த்துப் பார்த்து செய்வாங்க. குழந்தைகளோட கனவுகளுக்குத் தடையாக நிற்காமல், அவங்க சிறகடிச்சு பறக்க வானமாய் நிக்குறவங்க இந்த டிசம்பர் அப்பாக்கள்!