Astrology: 1.5 வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நண்பர்கள்.! செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் கோடிகளை சுருட்டப்போகும் ராசிகள்.!

Published : Nov 05, 2025, 10:52 AM IST

Mars Venus Conjunction in Scorpio 2025: நவம்பர் 26, 2025 விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவது முக்கிய கிரக நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கை

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் தங்கள் நிலையை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த மாற்றமானது மனிதர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சுக்கிர பகவான் நவம்பர் 26 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். அங்கு ஏற்கனவே கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் பயணித்து வருகிறார். இதன் காரணமாக 18 மாதங்களுக்குப் பிறகு விருச்சிக ராசியில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை நடைபெற உள்ளது.

சுக்கிர பகவான் அழகு, அன்பு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல், உறவுகள், பொன், பொருள், வசதிகளின் காரகராகவும், செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ரிஷபம்

செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கை ரிஷப ராசியின் ஏழாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. ஏழாவது வீடு திருமணம் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். இதன் காரணமாக உறவுகள் மற்றும் கூட்டுத் தொழில்களில் தீவிரம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு உறவில் காதல் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

தொழில் ரீதியான கூட்டாண்மைகள் வெற்றி பெறும். கூட்டாளிகளுடன் துடிப்புடன் செயல்பட்டு தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஆழமான உணர்ச்சி பிணத்தை ஏற்படுத்த நல்ல நேரம். இருப்பினும் பிடிவாதம் அல்லது அதிக உரிமை காரணமாக சண்டை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

35
விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நடைபெற இருப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் இலக்குகளை நோக்கிய உந்துதல் மேம்படும். உங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கு தயங்க மாட்டீர்கள். புதிய முயற்சிகளை தொடங்குவதற்கும், உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பான நேரமாகும். 

உங்கள் தைரியமும் முடிவெடுக்கும் திறனும் பிறரை ஈர்க்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்தும் கணிசமான லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

45
மகரம்

செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கையானது மகர ராசியின் 11-வது வீட்டில் நடைபெற இருக்கிறது 11-வது வீடு ‘லாப ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நிதி ரீதியாக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

குடும்பத்தினரின் நீண்ட கால தேவைகள் அல்லது ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். முதலீடுகள் மூலமும் ஆதாயம் பெறுவீர்கள். நண்பர்கள் வட்டத்தில் அதிக உற்சாகத்துடனும், இணக்கத்துடனும் காணப்படுவீர்கள். புதிய செல்வாக்கு மிக்க நபர்களின் வாய்ப்பு நட்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது உங்களுக்கு தொழில் ரீதியான பலன்களை வழங்கும்.

55
மீனம்

செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கையானது மீன ராசியின் 9-வது வீட்டில் நடைபெற இருக்கிறது. 9-வது வீடு என்பது அதிர்ஷ்டம், ஆன்மீகம், உயர்கல்வி, நீண்ட தூர பயணம் ஆகியவற்றை குறிக்கிறது. இதன் காரணமாக மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் கல்விக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணம் தொடர்பான திட்டங்கள் வெற்றி அடையலாம். உங்கள் உலகப் பார்வையை விரிவாக்க இது சிறந்த நேரமாகும். தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories