Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?

Published : May 19, 2026, 12:28 PM IST

Mars Transit in Aries - Ruchaka Panch Mahapurush Yoga Benefits : 2 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அசுர வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Mars Transit in Aries

Ruchaka Panch Mahapurush Yoga Benefits: ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். இவர் தைரியம், வீரம், மனவலிமை, ஆற்றல், விவேகம், உத்வேகம் ஆகியவற்றின் காரகராவார். இவர் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் பயணிப்பார். ஒரு சுழற்சியை முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் 24 மாதங்களுக்குப் பின்னர் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் பெயர்ச்சியானார். ஜூன் 21ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். செவ்வாய் பகவான் சொந்த ராசியில் இருப்பதால் ‘ருச்சக ராஜயோகம்’ உருவாகியுள்ளது. இது பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!

26
ருச்சக ராஜயோகம் பலன்கள்

இந்த யோகம் ஒருவருக்கு தன்னம்பிக்கை, தைரியம், எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல், தலைமைத்துவம் ஆகியவற்றை அளிக்கக்கூடிய யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் பொதுவாக செவ்வாய் பகவான் தனது சொந்த ராசிகளான மேஷம், விருச்சிகம் அல்லது தனது உச்ச ராசியான மகரத்தில் இருக்கும் பொழுது உருவாகும். தற்போது உருவாகியுள்ள ருச்சக ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Astrology: ஒரே நேரத்தில் ராகு, கேது, சனி பெயர்ச்சி.! இந்த 5 ராசிகள் வாழ்க்கையில் இனி பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!

36
மிதுனம்

மிதுன ராசியின் 11ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். 11-வது வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் அள்ள அள்ள பணம் வரும். பண வரவு அட்டகாசமாக இருக்கும். தொழில் ரீதியாக நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வேலையை பாராட்டி சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களுக்கு எதிராக சதி செய்து வந்த எதிரிகளை வீழ்த்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

46
கடகம்

கடக ராசியின் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். பத்தாவது வீடு தொழில் மற்றும் கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் தொழில் துறையில் கடக ராசிக்காரர்கள் புதிய உச்சங்களை எட்டுவீர்கள். வேலை மாற விருப்பபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வெற்றியை ருசிப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலைக்காக வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.

56
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் ருச்சக யோகத்தை உருவாக்கி இருக்கிறார். நான்காவது வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே மகர ராசிக்காரர்கள் ஜூன் 21 வரை தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைத்து உடல்நலம் சீராகும். உங்களை வாட்டி வதைத்து வந்த கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வழிகளில் பணம் வருவதால் பழைய கடன்களை அடைத்து மனம் நிம்மதி பெறுவீர்கள். வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். எதையும் சாதிக்கும் தைரியம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

66
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories