ஜோதிட சாஸ்திங்களின்படி 'கிரகங்களின் தளபதி' என்று வர்ணிக்கப்படுபவர் செவ்வாய் பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் தைரியம், தன்னம்பிக்கை, வீரம் மற்றும் நிலம் தொடர்பான சொத்துக்களுக்கு செவ்வாய் கிரகம் முக்கியத்துவம் வகிக்கிறது. பொதுவாக ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றும் போதெல்லாம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துவார்.
தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், வரும் மே 11-ம் தேதி தனது சொந்த வீடான மேஷ ராசிக்குள் நுழைகிறது. இந்த பெயர்ச்சியின் மூலம் மிகவும் வலிமையான 'ருச்சக ராஜயோகம்' உருவாவதோடு, சில குறிப்பிட்ட ராசிகளுக்கு 'விபரீத ராஜயோகம்' எனும் அபூர்வ யோகமும் கிடைக்க உள்ளது. இதன் காரணமாக ரிஷபம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி வளர்ச்சியும், அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது. ஜோதிட விதிகளின்படி, செவ்வாய் 6, 8, 12 ஆகிய மறைவு வீடுகளில் அமையும் போது இந்த விபரீத ராஜயோகம் உண்டாகிறது. இப்போது விபரீத ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகளின் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.