நவகிரக மண்டலத்தில் ஆற்றல், தைரியம், லட்சியம், வீரம் மற்றும் அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரகத்துவமாக விளங்குபவர் செவ்வாய் பகவான். ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய் பகவான், வரும் ஜூலை 25-ஆம் தேதி அன்று தனது தற்போதைய ராசிப் பாதையிலிருந்து விலகி புதிய பாதையில் பயணிக்கவுள்ளார்.
கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் இந்த மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மக்களின் தொழில் வளர்ச்சி, நிதி நிலைமை மற்றும் தனிப்பட்ட ஆளுமை ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய வேலை தேடுபவர்கள், புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுபவர்கள் மற்றும் பங்குச்சந்தை அல்லது சொத்துக்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும்.
இந்த பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் கிடைத்தாலும், 3 ராசிக்காரர்கள் மட்டும் அபரிமிதமான நன்மைகளையும் எதிர்பாராத யோகங்களையும் பெறப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசியினர்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.
இதையும் படிங்க: கோடீஸ்வர யோகத்தில் நனையப்போகும் 3 ராசிகள்! ஜூலை 29 சுக்கிர மாற்றத்தால் குவியப்போகும் செல்வம்!