Astrology: மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!

Published : Aug 05, 2026, 11:50 AM IST

Mars Moon Conjunction 2026: மிதுன ராசியில் விரைவில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இது சில ராசிகளுக்கு அளவற்ற செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றியை வாரி வழங்க உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.

PREV
15
Mahalakshmi Rajyog 2026

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை காரணமாக ராஜயோகங்கள் உருவாவது வழக்கம். அந்த வகையில் மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக உள்ளது. கிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி சந்திர பகவானும் மிதுன ராசிக்குள் நுழைய இருக்கிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை காரணமாக மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இது மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வாரி வழங்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!

25
மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திரன் சேர்க்கை நிகழ இருக்கிறது. எனவே மிதுன ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். திடீர் நீதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய நட்புகள் கிடைக்கலாம். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

இதையும் படியுங்கள் -  ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து; சடாஷ்டக யோகத்தால் டபுள் சிக்கல்.!

35
கன்னி

செவ்வாய் சந்திரன் சேர்க்கையில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் கன்னி ராசியின் பத்தாம் வீட்டில் நிகழவுள்ளது. பத்தாம் வீடு தொழில் வீடு என்பதால் கன்னி ராசிக்காரர்கள் தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்து வருபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு விரைவில் சுப செய்திகளைப் பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள் -  18 மந்திரவாதிகளை படிக்கட்டுகளாக மாற்றிய கருப்பசாமி.! அழகர்மலை 18 படிகளின் ரகசியம் தெரியுமா?

45
மகரம்

மகர ராசிக்காரர்களின் ஆறாவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. எனவே மகர ராசிக்காரர்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக மாறும். தொழிலில் இருந்த எதிரிகள் போட்டியாளர்கள் குறைவார்கள். தாயாரின் உடல் நலத்தில் ஆரோக்கியம் மேம்படும். மகாலட்சுமி தேவியின் அருளால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள் -  71 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்.! இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!

55
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories