பின்னோக்கி சென்ற குருபகவான்.. இந்த ராசிக்காரார்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் !!

First Published | Sep 16, 2023, 5:55 PM IST

வரும் டிசம்பர் 31ம் தேதி வரை குருபகவானின் பின்னோக்கிய பயணம் நிகழ உள்ளது. இதன் மூலம் பலன்கள் பெறப்போகும் ராசிகள், திருமணம் நடக்கப்போகும் ராசிகள் போன்றவற்றை இங்கு காணலாம்.

பொதுவாக நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும், ஒவ்வொரு கிரகத்தின் அதிபதி பொறுத்தே அவர்களது நடவடிக்கைகள் இருக்கும். தனிப்பட்ட ஜாதகத்தை பார்க்கும் போது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கிரகத்தின் குணாதிசயங்கள் பொறுத்தே ஒருவரது சூழ்நிலை இருக்கும். கிரகத்தின் இடமாற்றம் ஆனது பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும். இதன் மூலம் சில ராசிக்காரர்களும் அதிர்ஷ்டமும். சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் நடக்கலாம்.

Tap to resize

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 4ம் தேதி முதல் குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். செல்வம், மகிழ்ச்சி, திருமண பாக்கியம் முதல் குழந்தை பாக்கியம் வரை எல்லாவற்றிக்கும் முதல் காரணியாக விளங்குகிறார் குருபகவான். இத்தகைய குருபகவானின் பின்னோக்கிய பயணம் ஆனது டிசம்பர் 31 ஆம் தேதி வரை நிகழவுள்ளது. இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடக ராசியை பொறுத்தவரை வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திலிருந்து குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

அதேபோல துலாம் ராசி ஆனது நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சோலி முடிஞ்சு.. உடையும் இந்தியா கூட்டணி.. இளம் தலைவருக்கு பாதிப்பு: பிரபல நாடி ஜோதிடர் பாபு கணிப்பு !!

Latest Videos

click me!