மகாலட்சுமி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறப் போகுது.. இனி அதிர்ஷ்ட மழை தான்!

Published : May 11, 2026, 01:20 PM IST

Mahalaxmi Rajayoga 2026: ஜோதிடசாஸ்திரத்தின்படி மகாலட்சுமி ராஜயோகத்தால் 4 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

PREV
15
மகாலட்சுமி ராஜயோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் சுழற்சி மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மே 16-ம் தேதி அன்று விண்ணில் நிகழும் ஒரு அபூர்வ கிரக சேர்க்கை, மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதாவது தைரியத்திற்கு காரகனான செவ்வாய் பகவானும், மனதிற்கு காரகனான சந்திரன் பகவானும் ஒரே ராசியில் இணையும்போது இந்த மகாலட்சுமி ராஜயோகம் உண்டாகிறது.

வரும் மே 14 முதல் மே 16 வரை செவ்வாய் மற்றும் சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளனர். இந்த சேர்க்கையின் உச்சகட்ட பலனாக மே 16 அன்று இந்த ராஜயோகம் முழுமையடைந்து, சில குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிர்பாராத தன லாபத்தையும், சுப பலன்களையும் வழங்கவுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலக்கட்டம் ஆகும். தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் ராசியிலேயே இந்த யோகம் உருவாவதால் நல்ல பலன்கள் தேடி வரப்போகிறது. பணியிடங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொற்காலம். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். சகோதர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் மனவருத்தங்கள் நீங்கி அமைதி நிலவும். செவ்வாய்க்கிழமைகளில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.

35
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பொருளாதார ரீதியாகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். வேலையில்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் பணி அமையும். அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்குச் சாதகமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைத் தரும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து தொழில் விரிவடையும்.

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்திச் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். பல வழிகளிலும் பணம் வந்து பையை நிரப்பும். ஏழை மாணவர்களின் கல்விச் செலவிற்கு நோட்டுப் புத்தகம் அல்லது பேனாக்களை வாங்கிக் கொடுங்கள். பசுமாட்டிற்கு அருகம்புல் அல்லது பச்சைப் பயிறு வழங்குவது கூடுதல் நன்மை பயக்கும்.

45
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். நிதிச் சிக்கல்கள் முற்றிலுமாகக் குறையும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுத்துத் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகளும் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹிருதயம் கேட்பது அல்லது வாசிப்பது தன்னம்பிக்கையை உயர்த்தும். இனிப்புப் பண்டங்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்குங்கள்

55
துலாம்

துலாம் ராசியினருக்குப் பொன், பொருள் சேர்க்கைக்கான யோகம் இந்த மே மாதத்தில் பிரகாசமாக உள்ளது. பூர்வீக சொத்துக்கள் மூலம் பெரிய லாபம் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பங்குச்சந்தை மற்றும் இதர முதலீடுகளில் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும்.

வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் அமையும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் கைகூடி வரும். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது ராகு-கேது தோஷங்களை நீக்கி யோகத்தை பலப்படுத்தும்

Read more Photos on
click me!

Recommended Stories