ஜோதிடத்தில் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் சுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. புதன் அறிவு, புத்திசாலித்தனம், திட்டமிடல், ஒப்பந்தங்கள் மற்றும் உறவுகளைக் குறிப்பதாகவும், சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், சுகவாழ்வு ஆகியவற்றைக் குறிப்பதாகவும் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 22ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைய உள்ளதாகவும், அங்கு ஏற்கெனவே சஞ்சரிக்கும் புதனுடன் இணைந்து டிசம்பர் 2ஆம் தேதி வரை பயணிக்க உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேர்க்கையால் குபேர யோகம், தனலட்சுமி யோகம், மகாபாக்ய யோகம் உருவாகும் என்பது ஜோதிட நம்பிக்கை.