மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. காரியங்களில் இருந்த தடைகள், தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். இருப்பினும் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
நிதி நிலைமை:
இன்றைய தினம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பல வழிகளில் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரலாம். நீங்கள் எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். முதலீடுகள் குறித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டியது அவசியம். தேவையில்லாத செலவுகளை தவிர்க்க முயற்சிக்கவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உங்களின் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். திருமணத்திற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது மற்றவர்களின் கருத்துக்களை புரிந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களில் 3 ஆம் நபர்பளின் தலையீடை தவிர்க்க வேண்டியது அவசியம்.
பரிகாரங்கள்:
இன்றைய தினம் சனி்பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வர காரியத்தடைகள் நீங்கும் காகத்திற்கு உணவளிப்பது, வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிப்பது நன்மைகளைத் தரும். நேர்மையாகவும், இரக்கத்துடனும் இருப்பது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.