மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. நிதானமாக முடிவெடுப்பது வெற்றியைத் தரும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் உங்கள் அதிகாரமும் சமூக அந்தஸ்தும் உயர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
நிதி நிலைமை:
பொருளாதார விஷயங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உடனடியாக பெரிய ஆதாயங்களை காண முடியாவிட்டாலும் நீண்ட கால நிதி நிலைமைக்கு இது வழிவகுக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் சிறிய பின்னடைவை சந்திக்க நேரிடலாம். எனவே புதிய முதலீடுகளை கவனத்துடன் இருப்பது அவசியம். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் வருமானத்துடன் உங்களை ஒப்பிட வேண்டாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களின் உடல்நலையில் சற்று கவனம் தேவைப்படலாம். உறவினர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். ஏனெனில் உங்கள் வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்தலாம். திருமண வாழ்வில் உங்கள் துணையுடன் பழைய விஷயங்களுக்காக விவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது மனதிற்கு அமைதி தரும்.
பரிகாரங்கள்:
இன்று சிவ வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும். சிவபெருமான் அனைத்து சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு துணை புரிவார். மன உறுதி மற்றும் தைரியம் பெற ஆஞ்சநேயரை வணங்கவும். “ஓம் நமச்சிவாய:” மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது நன்மை தரும். இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது நேர்மறை பலன்களை கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.