மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும், வெற்றியும் கிடைக்கும் நாளாக இருக்கும். துணிச்சலான முடிவுகளை எடுத்து காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள்.
புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கான சொந்த அடையாளத்தை உருவாக்குவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி நிதானத்துடன் செயல்பட வேண்டிய அவசியம்.
நிதி நிலைமை:
பல வழிகளில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு இன்றைய தினம் அனுகூலமான நாளாகும். லாபங்கள் உண்டாகும் யோகம் கிடைக்கும். முதலீடுகளின் மூலம் சிறிய லாபத்தைப் பெறுவீர்கள். குடும்ப செலவுகளை சமாளிக்கத் தேவையான பணப்புழக்கம் ஏற்படும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்றைய தினம் வாழ்க்கைத். துணையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும் உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் உறவுகளில் வெளியாட்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்பட்டாலும் ஒருவித மன நிம்மதி நிலவும்.
பரிகாரங்கள்:
இன்று ஏற்படும் சுப யோகங்களின் பலன்களை முழுமையாகப் பெற லட்சுமி நாராயணரை வழிபடுவது நல்லது. நரசிம்மர் வழிபாடு மன தைரியத்தை அளிக்கும். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, அன்னதானம் செய்வது சுப பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.