மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். மன அமைதி சோதிக்கப்படலாம். அமைதியான மற்றும் பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை உங்களுக்கு உதவும் எந்த ஒரு செயலிலும் அவசரம் வேண்டாம். திட்டமிட்டு ஒழுங்கான அணுகுமுறையுடன் வேலைகளை செய்வது வெற்றியைத் தரும். பணியிடத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையைப் பொறுத்தவரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிதி முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை படித்தி பின்னர் செய்வது நல்லது. நிதி மேலாண்மை குறித்து யோசித்து முடிவெடுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்றைய நாள் குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சிறிய தவறான புரிதல்கள் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உறவில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு, உணர்ச்சி பூர்வமாக செயல்படுங்கள். நடைமுறை சிந்தனையுடன் இருப்பது நல்லது.
பரிகாரங்கள்:
இன்றைய தினம் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட நரசிம்மரை வழிபடுங்கள். சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி கற்கண்டு படைத்து வழிபடலாம். கோயில்களில் உள்ள மரங்களுக்கு நீர் ஊற்றுவது பலன்களை அதிகரிக்கும். ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.