சந்திர கிரகணம் 2026: அடிமேல் அடி வாங்கப் போகும் 4 ராசிகள்.. சோதனை காலம்.. முழு லிஸ்ட்!

Published : Aug 22, 2026, 02:02 PM IST

Lunar Eclipse 2026: ஆகஸ்ட் 28, 2026 அன்று நிகழும் சந்திர கிரகணம் காரணமாக ஜோதிட சாஸ்திரத்தின்படி 4 ராசிகளுக்கு கடும் சோதனை காலம் காத்திருக்கிறது. அவை எந்தெந்த ராசிகள்? என விரிவாக பார்ப்போம்.

PREV
15
Lunar Eclipse 2026

வானியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திர கிரகணம் விரைவில் நிகழவுள்ளது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணமான இது, வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழ்கிறது. இது பகுதி சந்திர கிரகணம் என வகைப்படுத்தப்பட்டாலும், நிலவின் 96.2 சதவீத பகுதி பூமியின் அடர்ந்த நிழலில் மறைக்கப்படும் என்பதால், இதன் தாக்கம் சற்று தீவிரமாகவே இருக்கும்.

இந்திய நேரப்படி காலை 9:42 மணிக்கு இது தொடங்குவதால், இந்தியாவில் இந்த நிகழ்வை நேரில் பார்க்க முடியாது. இந்த கிரகணமானது கும்ப ராசியிலும் சதயம் நட்சத்திரத்திலும் நிகழவுள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த கிரகணப் பெயர்ச்சி சில குறிப்பிட்ட ராசியினருக்குச் சில சவால்களைக் கொண்டுவரக்கூடும். அவர்கள் யார், எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

25
1. கும்பம்

கிரகணம் உங்கள் ராசியிலேயே நிகழ்வதால், இதன் நேரடித் தாக்கத்தை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்குச் சிறிய தாமதங்கள் ஏற்பட்டாலும், தொடர் முயற்சிகள் கை கொடுக்கும்.

பதற்றமான சூழலால் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் வரலாம். உடலாரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. கடுமையான பேச்சு குடும்பத்திலும் அலுவலகத்திலும் கருத்து வேறுபாடுகளை உருவாக்கலாம். கணவன்-மனைவி இடையே வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற அல்லது நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

35
2. சிம்மம்

கும்ப ராசிக்கு நேர் எதிரே அமைந்த ராசி என்பதால், சிம்ம ராசியினருக்குக் கூட்டுத் தொழில் மற்றும் தனிப்பட்ட உறவுகளில் சில திருப்பங்கள் ஏற்படலாம். ஆத்திரத்தில் முடிவெடுப்பதைத் தவிர்க்கவும்; அது உங்கள் சமூகப் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குச் சாதகமற்ற சூழல் நிலவக்கூடும். வியாபாரத்தில் கடுமையாக உழைத்தாலும் அதற்கேற்ற லாபம் உடனடியாகக் கிடைக்காமல் தாமதமாகலாம். எனினும், மாத இறுதியிற்குள் நிதி நிலைமை சீரடையும்.

45
3. ரிஷபம்

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசியினருக்கு இந்த சந்திர கிரகணம் நிதி மற்றும் பணி சார்ந்த விஷயங்களில் சில தடைகளை ஏற்படுத்தலாம். புதிய முதலீடுகளைத் தள்ளி வைப்பது நல்லது. யாருக்கும் புதிதாகக் கடன் கொடுக்க வேண்டாம்; ஏற்கனவே கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதிலும் சிரமங்கள் வரலாம். விருப்பமில்லாத இடமாற்றம் அல்லது பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் முரண்பாடுகள் ஏற்படலாம். வியாபாரிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

55
4. விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினருக்கு, இந்த கிரகணக் காலத்தில் சுகஸ்தானம் மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் கவனமுடன் இருப்பது அவசியம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் தேவையில்லாத மனக்கசப்புகள் வந்து செல்லலாம். வீட்டில் அமைதியைப் பேண சகிப்புத்தன்மை அவசியம்.

வேலை இடத்தில் வழக்கத்தை விடப் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். சொத்து தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories