Astrology: ஜூலை 14 முதல் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 'அந்த' 3 ராசிகள் யார் யார் தெரியுமா?

Published : Jul 01, 2026, 05:36 PM IST

Zodiac Signs: ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12 வரை நிகழும் குரு அஸ்தமனம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 3 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியைத் தரப்போகிறது. ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில், நிதிநிலை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பார்கள்.

PREV
14
குருபகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் அதிர்ஷ்டம், அறிவு மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக திகழ்பவர் குருபகவான். இவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் ஜூலை 14 அன்று குருபகவான் அஸ்தமன நிலையை அடையப் போகிறார். இந்நிலை ஆகஸ்ட் 12 வரை நீடிக்கும்.

ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும்போது அதன் தாக்கம் தற்காலிகமாக வலுவிழக்கும். இத்தகைய நிலையே 'அஸ்தமனம்' என்று அழைக்கப்படுகிறது. இதனால் 12 ராசிகளுக்கும் தொழில், நிதிநிலை, உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் இந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த குரு அஸ்தமனம் அசுர வளர்ச்சியைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

24
மேஷம் – தொழில் முன்னேற்றமும்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு அஸ்தமன காலகட்டம் வலுவான நிதி ஆதாயங்களைக் கொடுக்கப்பபோகிறது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். கடந்த கால முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அசுர லாபம் கிடைக்கப்போகிறது. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குத் துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். தடைபட்டுக் கிடந்த தொழில் விஷயங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரமும் புகழும் வளர்ச்சியும் உயரும்.

34
கடகம் – போட்டித் தேர்வுகளில் வெற்றி

கடக ராசியினருக்கு இந்த காலகட்டம் எதிர்பார்த்ததை விடவும் பல வழிகளில் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும், பாராட்டுக்களும் கிடைக்கும். செல்வத்தையும் லாபத்தையும் குவிப்பதில் வெற்றி காண்பீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நேரத்தை செலவிடுவீர்கள். உறவு மிகவும் பலப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நேரத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

44
தனுசு – புதிய தொழில் தொடங்கும் யோகம்

குருபகவானின் இந்த அஸ்தமன நிலை தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். உங்களது கடின உழைப்பிற்கு முழு பலன் கிடைக்கும். வருமானம் சீராக உயர்வதோடு, புதிய முதலீடுகள் மூலம் கூடுதல் வருமானம் வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி, ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். அது உங்களுக்குக் குறிப்பிடத்தக்க லாபத்தைத் தேடித்தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories