எந்த மாதமாக இருந்தாலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 6-ன் கீழ் வருகிறார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் மீது சுக்கிரன் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த கிரகம் காரணமாக, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் காந்த குணம் கொண்டவர்கள். அனைவரையும் எளிதில் கவரும் திறன் கொண்டவர்கள். அழகான தோற்றமும் கொண்டவர்கள். அனைவருக்கும் அன்பைப் பகிர்ந்துகொள்வார்கள். இவர்களுக்கு யாருடனும் பெரிய சண்டைகள் வராது. மிகவும் சமரச குணம் கொண்டவர்கள்.
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள், ஆண்களை யார் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்குள் வந்தவர்களை மிகவும் நேசிப்பார்கள். குறிப்பாக மிகவும் நம்புவார்கள். எந்த விஷயத்திலும் சிறிதும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். நல்லதோ கெட்டதோ, கண்மூடித்தனமாக நம்புவார்கள்.